Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெற்றி மிதப்பில் வங்கதேச வீரர்கள்... கடுப்பான இங்கிலாந்து கேப்டன்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. மூன்று  ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் ஆடுவதற்காக  இங்கிலாந்து அணி வந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர் முடிந்தபிறகு வங்கதேசம் சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணியாக வலம் வருகிறது. 

பாகிஸ்தான், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, இந்தியா, தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் வரிசையாக வங்கதேசத்துக்கு சென்று ஒருநாள் தொடரை இழந்து வந்துள்ளன. இந்நிலையில் இங்கிலாந்தின் இந்த சுற்றுப்பயணம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியிருந்தது. முதல் ஒருநாள் போட்டியில் தட்டுத்தடுமாறி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. இதையடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று தாக்காவில் நடந்தது. 

முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவரில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 238 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக மஹமதுல்லா 75 ரன்களை குவித்தார், கடைசி ஓவர்களில் வங்கதேச அணியின் கேப்டன் மோர்தாசா 29 பந்தில் இரண்டு பவுண்டரி, மூன்று சிக்ஸர் உட்பட 44  ரன்களை அதிரடியாகச் சேர்த்தார். இங்கிலாந்து அணி 239  ரன்களை எடுத்தால் தொடரை கைப்பற்றிவிடலாம் என்ற எண்ணத்துடன் களம் இறங்கியது. 

சுமாரான இலக்கு என்பதால் வங்கதேசம் வெற்றிபெறுமா என்ற சந்தேகம் உள்ளூர் ரசிகர்களுக்கே இருந்தது. முதல் மூன்று ஓவர்களில்  11 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து. அதன் பின்னர் மோர்தாசா விக்கெட் வேட்டையை ஆரம்பிக்க 10 ஓவரில் 31  ரன்களுக்கே நான்கு விக்கெட்டுகளை  இழந்து தத்தளித்தது இங்கிலாந்து அணி. பேர்ஸ்டோ, பட்லர்  இருவரும் சேர்த்து அதன் பின்னர் பொறுமையாக ரன்களை குவிக்க ஆரம்பித்தனர். ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது.பேர்ஸ்டோ 35 ரன்னிலும், அடுத்து வந்த மொயின் அலி 4  ரன்னிலும் பெவிலியன் திரும்பினார்கள். 

அடுத்த ஓவரிலியேயே டஸ்கின் அகமது பந்துவீச்சில் பட்லர் அவுட்டானார். ஆனால் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை, இதையடுத்து மூன்றாவது அம்பயரை வங்கதேச கேப்டன் மோர்தசா நாட உடனடியாக எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டது. அப்போது   இங்கிலாந்து கேப்டன் பட்லரை கடுப்பேற்றும் வகையில் கொண்டாடினர் வங்கதேச வீரர்கள். குறிப்பாக மஹமதுல்லா, பட்லர் முன்  சென்று முஷ்டி முறுக்கி பழித்தார். இதனால் ஆத்திரமடைந்த பட்லர் மஹமதுல்லாவுடன் சண்டை போட விரைந்தார். ஆனால் களத்தில் இருந்த அம்பயர் சமாதானப்படுத்தி பட்லரை அனுப்பி  வைத்தார்.

பட்லர் சென்ற பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கடைசி விக்கெட்டுக்கு கூட்டணி சேர்ந்த ஜேக் பால் மற்றும் அடில் ரஷிட் அதிரடியாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். 44  ரன்கள் சேர்த்த இந்த கூட்டணியை மோர்தசா  பிரித்தார். 34  ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது மட்டுமின்றி தொடரையும் சமன் செய்தது வங்கதேசம். பேட்டிங்கில் 44 ரன்கள், பவுலிங்கில் நான்கு விக்கெட்டுகள் எடுத்து அசத்திய மோர்தசா ஆட்டநாயகன் விருதை வென்றார். வங்கதேச வீரர்களின் மோசமான கொண்டாட்ட முறை குறித்து அதிருப்தி தெரிவித்தார் இங்கிலாந்து கேப்டன் பட்லர்.

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் மற்ற நாடுகளின் வீரர்களை தொடர்ந்து கேலி செய்யும் வண்ணம் வங்கதேச ரசிகர்களும், வங்கதேச வீரர்களும் செயல்பட்டு வருகின்றனர். இது அந்த அணி மீது கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடும் கோபம் கிளப்பியிருக்கிறது. வங்கதேசம் சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி போட்டிகளை ஜெயிப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயமாக இருந்தாலும், இது போன்ற செயல்கள் தொடர்ந்து அந்த அணி மீது உலக அரங்கில் தவறான பார்வையை விதைக்கிறது. வங்கதேசம் அதனை உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

- ஆனந்த் 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ