Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்வதேச அரங்கில் அதிவேக கோல்: அசத்திய பெல்ஜியம் வீரர்!


ர்வதேச கால்பந்து அரங்கில் வெறும் 8.1 விநாடிகளில் கோலடித்து, அதிவேக கோல் அடித்தவர் என்ற பெருமையை பெல்ஜியத்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் பென்டகீ பெற்றார். ஜிப்ரால்டர் அணியுடனான 2018 உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் அவர் இச்சாதனையை நிகழ்த்தினார்.

2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவிருக்கும் கால்பந்து உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடந்துவருகின்றன. ஞாயிறன்று நடந்த போட்டியில் தரவரிசையில் 2ம் இடத்திலுள்ள பெல்ஜியம் அணி, 205ம் நிலை அணியான ஜிப்ரால்டரை எதிர்கொண்டது. ஜிப்ரால்டர் அணி இந்த முறை தான் உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் முதல் முறையாக பங்கேற்கிறது. கத்துக்குட்டி ஜிப்ரால்டரை பந்தாடிய பெல்ஜியம் அணி 6-0 என்று அபார வெற்றி பெற்றது. விட்சல், மெர்டன்ஸ், கேப்டன் ஹசார்ட் ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். பென்டகி ஹாட்-டிரிக் கோல் அடித்து அசத்தினார்.

கத்துக்குட்டி அணியை எதிர்த்து விளையாடினாலும், பெல்ஜியம் அணி முழு பலத்துடனே களம் கண்டது. ஆனால் வழக்கமாக முன்களத்தில் விளையாடும் லுகாகுவிற்குப் பதிலாக பென்டகி களமிறக்கப்பட்டார். நடுவர் விசிலை ஊதியதும், ஜிப்ரால்டர் வீரர்கள் ஆட்டத்தைத் துவக்கினர். அப்போது ஜிப்ரால்டர் அணி வீரர், தனது சக வீரருக்குக் கொடுத்த பாசை இடையூறு செய்து பந்தை வசப்படுத்திய பென்டகி சர்ரென்று கோல் நோக்கிப் பாய்ந்தார். ஜிப்ரால்டர் அணியின் தடுப்பாட்ட வீரர்களையும், கோல்கீப்பரையும் ஏமாற்றி அவர் கோலடித்திருந்த போது, ஆட்டம் தொடங்கி வெறும் 8.1 விநாடிகளே ஆகியிருந்தது. இதன்மூலம் அதிகாரப்பூர்வமான சர்வதேச போட்டிகளில் அதிவேக கோலடித்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

சர்வதேச அரங்கில் ஜெர்மனி வீரர் லுகாஸ் பொடோல்ஸ்கி 6 நொடிகளிலேயே கோலடித்துள்ளார். ஆனால் அது நட்பு ரீதியிலான போட்டி என்பதால் ஃபிஃபா அமைப்பின் அதிகாரப்பூர்வ போட்டியாய் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

முன்னனி அணியான லிவர்பூல் அணிக்காக ஆடிவந்த கிறிஸ்டியன் பென்டகி பிரீமியர் லீக் தொடரில் வாய்ப்புகள் அதிகம் கிடைக்காமல் தடுமாறி வந்தார். கிடைத்த சில வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக்கொள்ளத் தவறியதால் அணியிலிருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம், பிரீமியர் லீக் அணியான கிறிஸ்டல் பேலஸ் அணியால் 32 மில்லியன் பவுண்டுகளுக்கு வாங்கப்பட்டார். அதில் சிறப்பாய் விளையாடியதால், தேசிய அணியின் ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட, அதை சரித்திரமாக மாற்றியுள்ளார் பென்டகி.

8.1 விநாடிகளில் கோலடித்து அசத்திய பென்டகியின் வீடியோவைக் காண

 

 

- பிரதீப் கிருஷ்ணா

   

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ