Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிஎம்டபிள்யூவை திருப்பிக் கொடுத்தார் தீபா கர்மாகர்... ஏன்?

திரிபுரா சாலைகளில் ஓட்டிச் செல்ல முடியாத நிலையில் பரிசாக வழங்கப்பட்ட பிஎம்டபிள்யூ காரை திரும்ப கொடுத்துவிட்டு வேறு கார் வழங்குமாறு ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகரின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர்  இறுதிச்சுற்று வரை முன்னேறினார். ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தான். கடந்த ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்து, சாக்ஷி மலிக், பேட்மின்டன் பயிற்சியாளர் கோபிசந்த் மற்றும் தீபா ஆகியோருக்கு சச்சின் தலைமையில் ஹைதரபாத்தில் நடந்த விழாவில் பிஎம்டபிள்யூ கார் பரிசாக வழங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 30 முதல் 35 லட்சம் வரை இருக்கும்.

ஆனால், திரிபுராத் தலைநகர் அகர்தாலாவில் வசித்து வரும் தீபா கர்மாகருக்கு இந்த விலைஉயர்ந்த காரால் எந்த பயனும் இல்லை. இதனால் வீட்டில் நிறுத்தியே வைத்திருந்தார்.. இந்த காரை ஓட்ட டிரைவரும் கிடைக்கவில்லையாம். திரிபுரா மாநிலச் சாலைகளில் இந்த காரை ஓட்டியும் செல்ல முடியாத நிலை. இதையடுத்து காரை திருப்பிக் கொடுத்த தீபா கர்மாகர், அதற்கு பதிலாக வேறு காரை கேட்டுள்ளார்.

இது குறித்து தீபாவின் தந்தை டூலால் கர்மாகர் கூறுகையில், '' நாங்கள் காரை திருப்பிக் கொடுத்து விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அது தவறு. இந்த காருக்கு பதிலாக வேறு காரை மாற்றித் தருமாறு கேட்டுள்ளோம். அகர்தலாவில் பிஎம்டபிள்யூ காரை ஓட்டவும் டிரைவர் கிடைக்கவில்லை. சாலைகளும் படுமோசமாக உள்ளன. இந்த காருக்கான சர்வீஸ் சென்டரும் இல்லை. ஹைதரபாத் பேட்மின்டன் அசோசியேசனிடம் இந்த காருக்கு ஈடான  பரிசுத்தொகயை தருமாறு கேட்டுள்ளோம். நாங்கள் டெல்லி , கொல்கத்தா போன்ற நகரங்களில் வசித்தால் இதுபோன்ற கார்களை பயன்படுத்த முடியும். அகர்தலாவில் இதுவெல்லாம் சாத்தியமில்லை'' என்றார்.‘

தீபாவின் பயிற்சியாளர் பிஷேவார் நன்டி, ''இது தீபாவின் தனிப்பட்ட முடிவல்ல. ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு '' என தெரிவித்துள்ளார்.

- எம்.குமரேசன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ