Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேப்டனாக முதல் 17 டெஸ்ட் போட்டிகள்... தோனி கோலி யார் கெத்து? #DhonivsKohli

 

நியூசிலாந்தை வாஷ் அவுட் செய்த இந்தியாவின் வெற்றி ஒருபுறம் கொண்டாடப்பட்டு வந்தாலும், மறுபுறம் பெஸ்ட் கேப்டன் யார். தோனியா? கோலியா? என  விவாதங்கள் நடந்த படி உள்ளன. சரி யாரு கெத்து கேப்டன் என்பதை டேட்டா மூலம் தேடும்போது தான், சில விஷயங்கள் தெரியவந்தது.

முழு நேர டெஸ்ட் கேப்டன்:

தோனி மற்றும் கோலியின் டெஸ்ட் கேப்டன் என்ட்ரியில் இவர்களது ஒற்றுமை தொடங்குகிறது. இருவருக்குமான டெஸ்ட் கிரிக்கெட் பயணம் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இருந்து அடுத்த கட்டத்துக்கு முன்னேறிச் செல்கிறது.

2008 தென் ஆப்ரிக்காவுடனான தொடரில் ஒரு போட்டிக்கு மட்டும் தோனி கேப்டனாக இருந்தார். அதுவே டெஸ்ட் கேப்டனாக தோனிக்கு முதல் போட்டி.

2008 அக்டோபர் -  நவம்பரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில், அப்போதைய கேப்டன் கும்ப்ளேவுக்கு காயம் ஏற்பட்டது. அதனால் அந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் தற்காலிக கேப்டனாக தோனி களம் இறங்கினார். அந்த தொடரோடு அனில் கும்ப்ளே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற, தற்காலிக கேப்டனாக இருந்த தோனி, அன்று தொடங்கி 2014 வரை டெஸ்ட் கேப்டனாக நீடித்தார்.

                                                                             

2014-15-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுடன் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இரண்டு போட்டிகளில் கோலி கேப்டனாக இருந்தார். அந்த தொடரோடு தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற, முழு நேர கேப்டனானார் கோலி. அன்று தொடங்கியது கோலியின் கேப்டன் கிராப்.

முதல் 5 டெஸ்ட் தொடர்கள் என்ன ஆனது?

சொல்லி வைத்தபடியே, இருவரும் கேப்டனாக விளையாடிய முதல் 5 தொடர்களின் முடிவுகளும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளது.

பங்களாதேஷுக்கு எதிராக 2015 ஜூன் 10-ம் தேதி நடந்த டெஸ்ட் போட்டி தான், கோலி முழுவதும் கோப்டனாக விளையாடிய முதல் தொடர். இதுவரை கோலி தலைமையில் இந்திய அணி 5 தொடர்களை விளையாடியுள்ளது. அதில் 4 வெற்றிகளும், ஒரு தொடர் டிரா செய்துள்ளது

கோலி கேப்டனாக முதல் 5 தொடர்கள்
ஆண்டு எதிரணி இடம் விக்கெட்டுகள் போட்டிகள்
2015 பங்களாதேஷ் பங்களாதேஷ் டிரா 0-0(1)
2015 இலங்கை இலங்கை வெற்றி 2-1(3)
2015/16 தென் ஆப்ரிக்கா இந்தி்யா வெற்றி 3-0(4)
2016 மே.இ தீவுகள் மே.இ தீவுகள் வெற்றி 2-0(4)
2016 நியூஸிலாந்து இந்தியா வெற்றி 3-0(3)

 

அப்படியே தோனியின் ரெக்கார்டை பார்ப்போம்.

தோனி முழுவதும் கேப்டனாக விளையாடிய முதல் தொடர், 2008/09 -ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடர். இந்த தொடரையும் சேர்த்து தோனி தலைமையிலான முதல் 5 டெஸ்ட் தொடர்களில் 4 வெற்றிகளையும், 1 தொடரை டிராவும் செய்துள்ளது இந்திய அணி.

தோனி கேப்டனாக முதல் 5 தொடர்கள்
ஆண்டு எதிரணி இடம் தொடர் முடிவு போட்டிகள்
2008-09 இங்கிலாந்து இந்தியா வெற்றி 1-0 (2)
2008-09 நியூஸிலாந்து நியூஸிலாந்து வெற்றி 1-0 (3)
2009-10 இலங்கை இந்தி்யா வெற்றி 2-0(3)
2009-10 பங்களாதேஷ் பங்களாதேஷ் வெற்றி 2-0(2)
2009-10 தென் ஆப்ரிக்கா இந்தியா டிரா 1-1(2)

 

 

 

 

 

 

முதல் 5 டெஸ்ட் தொடர்களில், எந்த தொடரையும் இவர்கள் நழுவ விட்டதே இல்லை என்பது கூடுதல் சிறப்பு.

 

வெற்றி சதவிகிதத்தில் என்ன ஒரு ஒற்றுமை! :

கேப்டன் தலைமை ஏற்று இதுவரை கோலி விளையாடிய போட்டிகள் 17. இந்த 17 போட்டிகளில் 10 வெற்றி, 2 தோல்வி, 5 டிரா என கோலியின் வெற்றி சதவிகிதம் 58.8%.

அப்படியே தோனி பக்கம் வாங்க. தோனி கேப்டனாக விளையாடிய தனது முதல் 17 போட்டிகளில், 10 வெற்றிகள் , 2 தோல்விகள், 5 டிரா என இவரின் வெற்றி சதவிகிதமும் 58.8%.

 

 

 

கோலி தலைமையில் பங்களாதேஷ் உடனான ஒரு போட்டி கொண்ட தொடர், மழை காரணமாக, கைவிடப்பட்டது. இப்போட்டியில் இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. மழை குறுக்கிடாமல் இருந்திருந்தால், கோலி தோனியை ஓவர்டேக் செய்திருக்கலாம்.

இதுல இருந்து என்ன தெரியுது. கோலியா? தோனியா? ரெண்டு பேரும் கெத்து தான் பாஸ்.


கோலிக்கு இன்னொரு சவால் இருக்கிறது. தோனி முழு நேர கேப்டனாக பதவி ஏற்ற பின் நடந்த முதல் 10 தொடர்களில், ஒரு தொடரைக் கூட தோற்காமல் இந்திய அணியை வழி நடத்தியுள்ளார். இவையே இந்திய அணி தோல்வி இல்லாமல் தொடர்ந்து விளையாடிய அதிக டெஸ்ட் தொடர்கள். இந்த ரெக்கார்டை உடைப்பாரா கோலி? பார்ப்போம்.

அஷ்வினுடன் காம்போ:

தோனி, கோலி இருவருக்கும் முக்கிய பலம் அஷ்வின். கோலி மற்றும் தோனி தலைமையில் அஷ்வினின் சுழல் ஜாலத்தை டேபிலில் பார்க்கலாம்.

காம்போ போட்டிகள் விக்கெட்டுகள் இன்னிங்ஸ் பெஸ்ட் டெஸ்ட் பெஸ்ட் 5 விக்கெட்டுகள் 10 விக்கெட்டுகள்
அஷ்வி்ன் - தோனி 23 114 7/103 12/85 12 2
அஷ்வின் - கோலி 16 106 7/59 13/140 12 4



 

 

 

 

2011 நவம்பரில் டெஸ்ட் போட்டிகளுக்குள் நுழைந்த அஷ்வின், இதுவரை பெற்ற தொடர் நாயகன் விருதுகள் 7. இதுவே இந்தியர் ஒருவர் பெற்ற அதிகபட்ச தொடர் நாயகன் விருதுகள். அஷ்வின் டெஸ்ட்டுக்குள் நுழைந்த காலம் தொட்டு இதுவரை எந்த நாட்டு வீரரும் 7 தொடர் நாயகன் விருதுகளை வென்றதில்லை என்பது சர்ப்பிரைஸ் தகவல்.

 

 

 

 

 

 

ரெ.சு.வெங்கடேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ