Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ்! #KabadiWorldCup


அகமதாபாத்தில் அக்டோபர்  18 ம் தேதி நடக்க உள்ள உலக கோப்பை கபடி லீக் போட்டியில் இந்திய அணி ஆர்.எஸ்.எஸ்.ஸை எதிர்கொள்கிறது. வேர்ல்ட் கப்ல ஆர்.எஸ்.எஸ். டீமா? என்ன பாஸ் கதை விடுறிங்கன்னு  உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது

மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்தியா குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. முதல் போட்டியில் தென் கொரியாவிடம் 2 புள்ளிகளில் தோல்வியடைந்த இந்தியா, அடுத்த போட்டியில் வங்கதேசத்துக்கு 57-20 என தண்ணி காட்டியது. வரும் 18 ம் தேதி நடக்க உள்ள போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. 

இங்கிலாந்து அணியில் உள்ள 12 வீரர்களில் ஆறு பேர், பிரிட்டனில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ளவர்கள். கேப்டன் சோமேஷ்வர் கலியா, ஜெய் தீபாலா, தேஜஸ் தீபாலா, ஆகாஷ் சூட், யுவராஜ் பாண்டே, கேசவ் குப்தா ஆகிய ஆறு பேரும், ‛ஹிந்து ஸ்வயம்சேவக் சங்கம்’ என்ற அமைப்பில் உள்ளனர். இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். என்றால், பிரிட்டனில் ஹிந்து ஸ்வயம்சேவக் சங்கம் . பேர் மட்டும் வேற.

உலக கோப்பை தொடங்குவதற்கு முன், தங்கள் வீரர்களுக்கு ஹிந்து ஸ்வயம்சேவக் அமைப்பு சோசியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்துள்ளது. முதல் போட்டியில் வங்கதேசத்திடம் தோல்வியடைந்த இங்கிலாந்து, இந்தியாவை எப்படியும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

‛‛எங்கள் அணியில் உள்ள ஆறு பேர் இங்கிலாந்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ளவர்கள். ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்தபோதுதான் கபடி விளையாட பழகினோம். ஆர்.எஸ்.எஸ்.ஸில் அங்கம் வகிப்பதில் பெருமை அடைகிறோம். அதேநேரத்தில் நாங்கள் பிறந்து வளர்ந்தது எல்லாமே இங்கிலாந்தில்தான். அதனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் எங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தி வெற்றி பெற முயற்சிப்போம்’’ என்றார் கேப்டன் சோமேஷ்வர் கலியா.

- தா.ரமேஷ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close