Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சரித்திர சாதனை

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் மகாராஷ்டிரா-டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கஹாடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில்தான் இந்த சரித்திர சாதனை நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் மகாராஷ்டிரா அணி கேப்டன் ஸ்வப்னில் கூகலே மற்றும் அன்கிட் பவனே 5-வது விக்கெட்டுக்கு 594 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்து சாதனை படைத்துள்ளது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுதான். இதற்கு முன்பு போபால் அணிக்காக விஜய் ஹசாரே-குல் முகமது ஜோடி கடந்த 1946-ம் ஆண்டு 577 ரன்கள் எடுத்தே அதிகபட்சமாக இருந்தது.


ஸ்வப்னில் 351 ரன்களும், அன்கிட் 258 ரன்களும் எடுத்தனர். கடைசி வரையில் இந்த ஜோடியை டெல்லி அணியால் பிரிக்க முடியவில்லை. மேலும், உலக அளவில் முதல்நிலைப் போட்டிகளில் 2-வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் என்ற சாதனையையும் இந்த ஜோடி நிகழ்த்தியுள்ளது. இலங்கையின் சங்கக்காரா மற்றும் ஜெயவர்தனே ஜோடி இணைந்து கடந்த 2006-ம் ஆண்டு 624 ரன்கள் எடுத்ததே உலக அளவில் முதல் நிலை போட்டியில் எடுத்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ