Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுஷில் குமாரின் அடுத்த ஆக்ஸன் அவதாரம் 'WWE'

இந்தியா சார்பில் 2 முறை ஒலிம்பிக் பதக்கம் தட்டிய மல்யுத்த வீரர் சுஷில் குமார். ஆனால், ரியோ ஒலிம்பிக்கில் இவரால் கலந்து கொள்ள முடியவில்லை. இவருக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்ட நர்ஷிங் யாதவும் கடைசி நேரத்தில் போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் WWE மல்யுத்த போட்டிகளில் சுஷில் குமார் கலந்து கொள்ளப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுகுறித்து சுஷில் குமார் கூறுகையில், "WWE நிர்வாகிகள் என்னுடன் பேசியது உண்மைதான். ஆனால், அதுகுறித்து நான் இன்னும் முடிவு எடுக்கவில்லை. தொடர்ந்து மல்யுத்தப் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன்" என்றார். இதுகுறித்து சுஷில்குமாரின் வட்டாரங்களில் கூறியதாவது,   "WWE போட்டிகளை இந்தியாவில் ப்ரமோட் செய்ய முடிவு எடுத்துள்ளார்கள். அதற்காக தான் சுஷிலிடம் பேசியுள்ளனர். இன்னும் சில நாட்களில் இதன் முடிவுகள் தெரிய வரும்" என்றனர்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ