Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரோஜர் ஃபெடரருக்கு என்ன ஆச்சு?

டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னன்  ரோஜர் ஃபெடரர், ஸ்பெயினில் கார் விபத்தில் சிக்கியதாக செய்தி பரவியது. தகவல் அறிந்து அவரது ரசிகர்கள் பதற்றம் அடைந்தனர். கிராண்ட் ஸ்லாம் நாயகன் ரோஜர் ஃபெடரர், மாட்ரிட் நகரில்  இன்று காலை கார் விபத்தில் சிக்கியதாக, வாட்ஸ்அப்பில் தகவல் வெளியானது. சிறிது நேரத்தில் ட்விட்டரில் இது விறுவிறுவனெ பரவியது. ஆனால், சில மணி நேரங்களிலேயே அது வதந்தி எனத் தெரிய வந்ததும் நிம்மதி அடைந்தனர். 

பொதுவாக, கிரிக்கெட் குறித்த புள்ளி விவரங்களை வெளியிடும் மோகன்தாஸ் மேனன், இந்தப் பதிவை வெளியிட்டதால், உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் ஸ்போர்ட்ஸ் நிருபர்களும், இந்த செய்தியை RT செய்ததால், சந்தேகம் வலுத்தது. சிலர் ‛தி கார்டியன், டெலிகிராப், டெய்லி மெய்ல்’ உள்ளிட்ட வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு மென்சன் செய்து, இது உண்மையா என கேள்வி எழுப்பினர்.  


இந்த தகவல் உண்மையா என உடனடியாக கூகுளில் தேடினால், ஒரே ஒரு இணையத்தில் மட்டும் தகவல் வெளியாகி இருந்தது. 


‛ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் தன் நண்பர்கள் நடத்திய பார்ட்டியில் பங்கேற்ற ரோஜர் ஃபெடரர், உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணி அளவில் தன் பென்ஸ் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியனில் மோதியது. இதில் ஃபெடரர் படுகாயம் அடைந்தார். போலீஸார் விசாரித்து வருகின்றனர்’

என, அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. உன்னிப்பாக கவனித்ததில், அந்த செய்தி நேற்றைய தேதியில் பதிவிடப்பட்டிருந்ததும்,  சிங்கப்பூரில் 2014ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் தொடர்புடைய படத்தை வெளியிட்டிருப்பதும் தெரியவந்தது. இது தெரியாமல், ஃபெடரர் விபத்தில் சிக்கியதாக வதந்தியைக் கிளப்பி விட்டனர். 

 


புதன்கிழமைதான் ஸ்பெயினில் பிரபல டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் தொடங்கிய டென்னிஸ் அகாடமி திறப்பு விழாவில் ஃபெடரர் பங்கேற்றார். அந்த படங்களை மூன்று மணி நேரத்துக்கு முன்னதாக ஃபெடரர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.  அதற்குள் இப்படி ஒரு வதந்தி பரவியது, ஃபெடரர் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடைசியில், அந்த தகவல் உண்மை இல்லை எனத் தெரிந்ததும் நிம்மதிப் பெரு மூச்சு விட்டனர்.

- தா.ரமேஷ்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ