Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எட்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லுமா இந்தியா? #kabadiworldcup

உலக கோப்பை கபடி அரையிறுதியில் ஆரம்பத்தில் இருந்தே அசராது அடித்து, 73-20 என்ற புள்ளிகளில் தாய்லாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா. சனிக்கிழமை நடக்கும் ஃபைனலில் எதிர்பார்த்தது போலவே இந்தியா - ஈரான் அணிகள் மோத உள்ளன. லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் எளிதாக வென்ற இந்திய அணிக்கு நாளைஃபைனலில்தான் சவால் காத்திருக்கிறது.

அஹமதாபாத்தில் உலக கோப்பை கபடிப் போட்டி நடந்து வருகிறது. அரையிறுதியில் முதல் நிமிடத்தில் இடத்தில் இருந்தே டாப் கியரில் பயணித்தது இந்தியா. Raid சென்ற ஒவ்வொரு இந்திய வீரரும் வெறுங்கையுடன் திரும்பாது புள்ளிகளை அள்ளி வந்தனர். இதனால் பெரும்பாலான நேரம் தாய்லாந்து நான்குக்கும் குறைவான வீரர்களுடனே விளையாடியது. அதே நேரத்தில் இந்தியா வந்தவர்களை எல்லாம் கேட்ச் போடவும் தவறவில்லை. ரெய்டில் அஜய் தாக்குர், பிரதீப் நர்வர் தாய்லாந்து பிடியைத் நகர்த்து பாயின்ட் அள்ள, மஞ்சித் சில்லார், சுர்ஜித் இருவரும் டிஃபன்சில் தட்டி வீச, இந்தியா முதல் பாதியில் 36-8 என முன்னிலை பெற்றது. இந்திய அணியில் உள்ள வீர்ர்களின் சராசரி வயது 27. அதோடு அனுபவமும் கைகோத்ததால், 22 வயது தாண்டாத தாய்லாந்து இளம் வீரர்களால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. இரண்டாவது பாதியில் இந்தியா இன்னும் அசால்டாக ஆடியது. மொத்தம் எட்டு முறைக்கு மேல் தாய்லாந்தை ஆல் அவுட் செய்தது. முடிவில் இந்தியா 73-20 என வெற்றி பெற்றது. ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா, முதல் போட்டியில் தென் கொரியாவிடம் தோல்வியடைந்தது. அதன்பின் தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று, கோப்பையை நெருங்கி விட்டது. மற்றொரு அரையிறுதியில் தென் கொரியாவை 28-22 என வீழ்த்தி ஃபைனலுக்கு தகுதி பெற்றது ஈரான். இந்த தொடரில் இந்தியாவுக்கு சவால் அளிக்கவல்ல அணி என கருதப்பட்டது ஈரான் மட்டுமே. எனவே ஃபைனலில் ஈரானை வீழ்த்தி எட்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

-தா.ரமேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ