Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மக்கள் நிதிதிரட்டி அனுப்பினர் ; மிஸ்டர். ஆசியா ஆனார் லாரி ஓட்டுநர்!

பொதுமக்கள் நிதி திரட்டி போட்டிக்கு அனுப்பிய தண்ணீர் லாரி டிரைவர் ஒருவர் மிஸ்டர். ஆசியா ஆகி இந்தியாவுக்கு பெருமைச் சேர்த்துள்ளார்.

பெங்களூரு வர்தூரை அடுத்த ராமகவுண்டஹல்லி பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணா. வொயிட்பீல்ட் பகுதியில், பாலகிருஷ்ணனை அடிக்கடி பார்க்க முடியும். இங்குதான் அவர் தினமும் லாரியில் தண்ணீர் சப்ளை செய்வார். பாடி பில்டரான பாலகிருஷ்ணா சத்தமில்லாமல் ஆணழகன் போட்டிக்குத் தயாராகி வந்தார். மிஸ்டர். யூனிவர்ஸ் ஆக வேண்டும் என்பது அவரது கனவு. தண்ணீர் லாரி டிரைவராக இருந்து கொண்டே,அதற்காக  தன்னை பாலகிருஷ்ணா தயார் படுத்தி வந்தார். காலையில் வீடு வீடாகச் சென்று தண்ணீர் சப்ளை செய்துவிட்டு மற்ற நேரங்களில் ஜிம்மில்தான் இருப்பார். 'ஒயிட்பீல்ட் அர்னால்ட் ' என்றுதான் அந்த பகுதி மக்கள் பாலகிருஷ்ணாவை அழைப்பார்கள். சிறுவயதிலேயே தந்தையை இழந்துவிட்ட பாலகிருஷ்ணா , குடும்பத்தையும் காப்பாற்றி வந்தார்.

அவரது கடும் உழைப்புக்கு இப்போது வெற்றி கிடைத்துள்ளது. சினிமா ஹீரோ போல இருக்கும்  25 வயது பாலகிருஷ்ணாதான் இப்போது மிஸ்டர். ஆசியா. பிலிப்பைன்சில் நேற்று நடந்த மிஸ்டர். ஆசிய ஆணழகன் போட்டியில் சாம்பியனாகி சாதனை படைத்துள்ளார் பாலகிருஷ்ணா. மணிலாவில் 35 ஆயிரம் மக்கள் முன்னிலையில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டியுள்ளார் பாலகிருஷ்ணா. வெற்றி குறித்து அவர் கூறுகையில், ''எனது வெற்றியை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன். நான் சிறுவனாக இருந்தபோதே அவரை இழந்து விட்டேன். கடந்த 10 வருடங்களாக தண்ணீர் லாரி ஓட்டி வருகிறேன். கடந்த 2010-ம் ஆண்டு முதல் தொழில்முறையிலான ஆணழகன் போட்டியில் பங்கேற்று வருகிறேன். ஆனால் அதற்காக நான் பட்ட கஷ்டங்களை சொல்லி மாள முடியாது.  ஸ்பான்சர்ஷிப் கிடைத்தால் என்னால் மிஸ்டர். யூனிவர்ஸ் கூட ஆக முடியும் என்றார்.

மும்பையைச் சேர்ந்த பிரபல பாடி பில்டிங் பயிற்சியாளர் சங்கலா சோக்ராம்தான் பாலகிருஷ்ணாவுக்கு பயிற்சியாளர். தனது பயிற்சியாளருக்கு நன்றி தெரிவித்துள்ள பாலகிருஷ்ணா மேலும் கூறுகையில், '' தண்ணீர் லாரி ஓட்டியதால் கிடைத்த கூடுதல் வருமானத்தில் என்னால் ஓரளவுக்கு நல்ல சத்துமிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ள முடிந்தது. தினமும் இரு வேலை பார்ப்பேன். காலையில் வீடுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்வேன். மாலையில் ஜிம்மில் இன்ஸ்ட்ரக்டராக பணியாற்றுவேன். தினமும் 6 மணி நேரம் உழைத்தேன். எனது தாயார் பர்வதம்மா, சகோதரர் ராஜு ஆகியோர் எனக்கு உதவியாக இருந்தனர்.

பாடி பில்டிங்கிற்கு புரதச்சத்து மிகுந்த உணவுகள் அதிகளவு எடுக்க வேண்டும். தினமும் 750 கிராம் சிக்கன், 25 முட்டைகள், 300 கிராம் அரிசி உணவு, 200 கிராம் மீன் உணவுகளை எடுத்துக் கொண்டேன். இந்த உணவெல்லாம் போதவில்லை. எனது நிலையை கண்ட வொயிட்பீல்டு மக்கள்தான் நிதி திரட்டினர். இப்போது பிலிப்பைன்ஸ் வருவதற்கு கூட வொயிட்பீல்டு பகுதி மக்கள்தான் நிதி திரட்டி அனுப்பினர். அவர்கள் தந்த பணத்தில்தான் பிலிப்பைன்ஸ் வந்தேன். இப்போது அந்த மக்களின் நம்பிக்கையை காப்பற்றி விட்டேன்'' என்கிறார் பெருமிதத்துடன்.

கடந்த 2013-ம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த  24 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பாலகிருஷ்ணா மிஸ்டர் ஆணழகன் ஆனார். அடுத்த ஆண்டு ஏதென்சில் நடந்த உலகச் சாம்பியன்ஷிப் போட்டியிலும் இதே பிரிவில் பட்டம் வென்றார்.

பாலகிருஷ்ணா போன்ற திறமையாளர்களை விளையாட்டுத்துறை அமைச்சகம் ஊக்குவிக்க வேண்டுமென்பதுதான் விளையாட்டு ஆர்வலர்களின் ஆசை.

-எம்.குமரேசன்

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ