Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ரெய்னா அவுட்

இந்தியா-நியூஸிலாந்து ஒரு நாள் போட்டிக்கு முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டிருந்தது. காய்ச்சல் காரணமாக சுரேஷ் ரெய்னா முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. இரண்டாவது ஒரு நாள் போட்டிக்கான நெட் பயிற்சியில் ரெய்னா பங்கேற்றார். ஆனால், அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் களமிறங்கவில்லை என்று கூறினார்கள். இந்நிலையில் அடுத்த இரண்டு ஒரு நாள் போட்டிகளுக்கும் இதே அணி தான். சுரேஷ் ரெய்னா இல்லை என பி.சி.சி.ஐ இன்று தெரிவித்துள்ளது. நான்காவது ஒரு நாள் போட்டி 26-ம் தேதி நடக்கிறது.

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ