Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சச்சினின் சத சாதனையை கோலி எத்தனையாவது போட்டியில் முறியடிப்பார் தெரியுமா..? #FactRevealed

கோலியின் ஃபெர்பார்மென்ஸ் குறித்து குறிப்பிட்டு கட்டுரையை ஆரம்பிக்க  தமிழில் இன்னும் வார்த்தைகளைத் தேடவேண்டும் போல! நாளுக்கு நாள் கோலியின் மிரட்டல் இன்னிங்ஸ் வேற லெவலில் சென்று கொண்டிருக்கிறது. இந்தியா - நியூசிலாந்து அணிக்கு எதிரான  மூன்றாவது ஒருதின போட்டியில் அபார சேஸிங் சதம் அடித்ததன் மூலம் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார் கோலி. சில பல காலமாகவே கோலி - சச்சின் குறித்த புள்ளிவிவர ஒப்பீடுகள் அதிகரித்து வருகின்றன. சச்சின் - கோலி இருவரும் எப்படி விளையாடியிருக்கிறார்கள் என்பதைப் புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன என கவனிப்போமா? 

ஒவ்வொரு 25 போட்டிகளிலும் இருவரும் எவ்வளவு  சதங்கள் அடித்திருக்கிறார்கள்  என்பதை மேலே காணலாம். சச்சின் முதல் ஒருநாள் போட்டியில் எடுத்த ரன்கள் எவ்வளவு தெரியுமா? டக் அவுட். இரண்டாவது ஒருநாள்  எடுத்த ரன்கள் என்ன? அதுவும்  டக் அவுட் தான். இப்படித்தான் ஆரம்பித்தது லிட்டில் மாஸ்டரின் ஒருதின இன்னிங்ஸ்கள். ஆரம்பக்கட்டத்தில் கீழ் நடுவரிசையிலும், பின்னர் மேல் நடுவரிசையிலும் ஆடினார் டெண்டுல்கர். போதுமான பேட்டிங் வாய்ப்பு கிடைக்காததால் சச்சின் டெண்டுல்கரால் அந்த கால கட்டங்களில் எளிதாக  சதங்களை எடுக்க முடியவில்லை. தனது 66-வது போட்டியில் தான் முதல் முறையாக தனக்கு பிடித்த தொடக்க வீரர் இடத்தில் களமிறங்கினார் சச்சின். ஒருதின போட்டியில் விளையாட ஆரம்பித்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 79-வது போட்டியில் தான் முதல் சதம் எடுத்தார் சச்சின்.  கோலி - சச்சின் இடையே பார்த்தால், 166 இன்னிங்ஸ்களில் ஒரு இடத்தில் கூட சச்சினை பின்தங்காமல் நேர்த்தியாக  சீரான முறையில் கோலி சதங்களை விளாசியிருப்பதை அறியலாம்.

 

 

எத்தனையாவது போட்டியில் இருவரும் எத்தனையாவது சதம் விளாசியிருக்கிறார்கள் என்பதை  கீழே உள்ள சார்டில் காணலாம்.(கர்சரை நகர்த்தி எந்த போட்டியில் எவ்வளவு சதம் என தெரிந்து கொள்ளுங்கள்)

முதல் சதம் எடுத்த பின்னர் அடுத்த 75 போட்டிகளுக்குள் பதினோரு சதம் அடித்திருக்கிறார் சச்சின். அதன் பின்னர் இடையில் 25 போட்டிகளில்  சதமே அடிக்கவில்லை. இதையடுத்து  தாறுமாறாக சதங்களை விளாசித்தள்ளியிருக்கிறார். 175-275 இடையிலான போட்டிகளில் சுமார் 18 சதங்கள் விளாசியிருக்கிறார் மாஸ்டர் பிளாஸ்டர். முதல் நூறு போட்டிகளில் சுமார் 13  சதம் அடித்திருக்கிறார் கோலி. ஆனால் அடுத்த 13  சதங்களை எடுக்க அவருக்கு வெறும் 66 இன்னிங்ஸ்கள் தான் தேவைப்பட்டன.

166 போட்டிகள் வரையில் கணக்கு எடுத்தால் சச்சின் 12 சதங்கள் எடுத்திருக்கிறார். ஆனால் கோலியோ 26 சதங்கள் எடுத்து மலைக்க வைத்திருக்கிறார். 166 போட்டிகள் வரை சச்சின் டெண்டுல்கர் சராசரியாக 13.83 போட்டிகளுக்கு ஒரு சதம் என்ற அளவில் இருந்திருக்கிறார். ஆனால் கோலியோ ஒவ்வொரு 6.38  ஒருதின போட்டிக்கும் ஒரு சதம் விளாசியிருக்கிறார்.

ஒவ்வொரு நூறு போட்டிகளுக்கும் இருவருக்கும் சராசரியாக எத்தனை இன்னிங்சில் ஒரு சதம் அடித்திருக்கிறார்கள் என கணக்கு எடுத்துப்பார்த்தால் டெண்டுல்கர் ஆரம்ப நூறு போட்டிகளுக்கு பிறகு தொடர்ச்சியாக சச்சின் சிறப்பான முறையில் சதம் விளாசியிருப்பதை அறிய முடியும். கோலி முதல் நூறு போட்டிகளிலேயே சூப்பர் சராசரி தான். அதன் பின்னர் 'அவர் வேற லெவல்' என நிரூபிப்பதை புள்ளிவிவரமே காட்டிக்கொடுத்து விடுகிறது.

கட்டுரையின் கிளைமாக்ஸ் இதுதான். சச்சின் டெண்டுல்கர் 452-வது இன்னிங்ஸில் தான் 49-வது சதம் எடுத்தார். ஒட்டுமொத்தமாக 24 வருடமாக ஒருதின போட்டிகளில் ஆடியதில் ஒவ்வொரு 9.24 இன்னிங்ஸ்க்கும் ஒரு சதம் என்ற ரீதியில் தனது கேரியரில் சதங்களை விளாசி மலைக்க வைத்திருக்கிறார் சச்சின். கோலி இதுவரை ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு 6.38 இன்னிங்ஸ்க்கும் ஒரு சதம் அடித்து பிரமிக்க வைத்திருக்கிறார். இந்த சராசரியை கணக்கு வைத்துக்கொண்டு பார்த்தால் அவர் ஆடும் 311 அல்லது 312-வது ஒருதின  இன்னிங்ஸில்  சச்சினின் 49 சதங்கள் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்க்கலாம். ஒருவேளை சச்சின் ஆடிய அளவுக்கு 462 ஒருநாள் போட்டிகள் வரை ஆடினால் 72 சதங்கள் வரை கோலி அடிக்கக்கூடும் என புள்ளிவிவரப் பட்சி சொல்கிறது.

அம்மாடியோவ்! 

- பு.விவேக் ஆனந்த்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close