Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நியூஸிலாந்துடன் போராடி தோற்றது இந்தியா

இந்தியா-நியூஸிலாந்து நான்காவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸி., அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 260 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ரஹானே 57, கோலி 45, அக்‌ஷர் 38 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இறுதியில்  இந்தியா 48.4 ஓவர்களுக்கு 241 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 19 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸி., வெற்றி பெற்றது. அந்த அணியின் டிம் சவுதி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகள் பெற்று சமநிலையில் உள்ளன. 5-வது மற்றும் இறுதி போட்டி சனிக்கிழமை நடக்கிறது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ