Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஈரான் போட்டியில் இந்த விளையாட்டு வீராங்கனை ஏன் பங்கேற்கவில்லை?

வரும் டிசம்பர் மாதம் ஈரானில், ஆசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடக்கவுள்ளது. இதில் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனையான ஹீனா சிந்து பங்கேற்க இருந்தார். ஆனால், ஈரானில் போட்டியில் பங்கேற்பதென்றால், ஹிஜாப் விதியை பின்பற்ற வேண்டும் என்று கட்டாயம் எனக் கூறப்பட்டது.

ஹிஜாப் விதி என்பது, புர்கா அணிவது போல நடைமுறைகளை உள்ளடக்கியது. இதை கேள்விப்பட்டவுடன், ஹீனா, ‘விளையாட்டு வீரர்களுக்குக் கூட இதைப் போல் விதிமுறைகளை கட்டாயப்படுத்துவது, விளையாட்டுக்கு உகந்தது அல்ல’ என்று கூறி இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ