Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"தற்கொலை செய்ய நினைத்தேன்" - சுயசரிதையில் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக்!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு, முதல் திருமணம் தோல்வி... இரண்டும் சேர்ந்து வதைக்க, ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கெள்ள நினைத்ததாக, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக்,  தன் சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

பிராட் ஹாக், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் சுழற்பந்துவீச்சாளர். 1996-ல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆன இவரால், ஷேன் வார்ன் புகழ் வெளிச்சத்துக்கு முன் பிரகாசிக்க முடியவில்லை. ஆனாலும், 2003 மற்றும் 2007 ல் உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்தார். 2008-ல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

அதன்பின் வர்ணனையாளர் அவதாரம் எடுத்த ஹாக், திடீரென மீண்டும் கிரிக்கெட் அரங்கில் புகுந்து, உலகெங்கும் நடக்கும் டி-20 தொடர்களில் விக்கெட் வேட்டை நிகழ்த்தினார். கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக பங்கேற்றதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் விளையாடிய வயதான வீரர் என்ற பெருமை பெற்றார். தவிர, 45-வது வயதில் பிக் பாஷ் தொடரில் மெல்போர்ன் ரினிகேட்ஸ் அணிக்காகவும் விளையாடினார்.

சமீபத்தில் அவர்,  The Wrong ‘Un' என்ற சுயசரிதை புத்தகம் எழுதினார். அதில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததால், விரக்தியின் உச்சத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

''கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்த பின், மண வாழ்வும் தோல்வியடைந்ததால் மன அழுத்தத்தில் இருந்தேன். நிறைய மது அருந்தினேன். ஒருநாள் போர்ட் பீச் பகுதியில் காரை நிறுத்தி விட்டு இருட்டில் நடந்து சென்றேன். கடலை வெறித்துப் பார்த்து ஒரு முடிவு எடுத்தேன். கடல் தடுப்பு அரிப்பான் கற்கள் வரை நீந்திச் செல்ல வேண்டும். திரும்பி வந்தால் ஓகே. இல்லையென்றாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்தேன். முடிவை விதி வசம் ஒப்படைத்து விட்டு நான்கு முறை நீந்திச் சென்றேன். ஒவ்வொரு முறையும் அந்த முயற்சி கடினமாக இருப்பதை உணர்ந்தேன். அப்போதுதான் நினைப்பதற்கும், நிறைவேற்றுவதற்கும் இடையே நிறைய வித்தியாசம் இருப்பது புரிந்தது. அதிர்ஷ்டவசமாக, பிழைத்து விட்டேன்’’ என்று அந்த புத்தகத்தில் எழுதியுள்ளார்.


பிராட் ஹாக், ஆஸ்திரேலிய அணிக்காக ஏழு டெஸ்டில் 17 விக்கெட்டுகளும், 123 ஒருநாள் போட்டிகள் மூலம் 156 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். தவிர பல்வேறு லீக் மூலம் 125 டி-20 போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார் . தற்போது வர்ணனையாளராக வலம் வருகிறார்.


- தா.ரமேஷ் 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ