Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

11 சொதப்பல் வீரர்கள்... பட்டியலில் யார் யார்? #INDvsNZ

சொதப்பல்

இந்தியா - நியூசிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்  யார்  என கேட்டால், சட்டென விராட் கோலி, ரவிச்சந்திர அஷ்வின் என பொட்டில் அடித்தார் போல பதில் வரும். ஆனால் சொதப்பல் மன்னர்கள் யார் எனக்கேட்டால் கொஞ்சம்  ரசிகர்கள் தடுமாறுவார்கள். இந்திய அணியிலும் சரி, நியூசிலாந்து அணியிலும் சரி இந்தத் தொடரில் எக்கச்சக்க சொதப்பல் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இருந்து சொதப்பல் வீரர்கள் பதினோரு பேரைத் தேர்வு செய்திருக்கிறோம். இரண்டு தொடக்க வீரர்கள், இரண்டு நடு வரிசை பேட்ஸ்மேன்கள், இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள், ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர், இரண்டு பவுலிங் ஆல்ரவுண்டர், இரண்டு பவுலர்கள் என பக்கா பேக்கேஜாக அணி இருக்கிறது.

ரோஹித் ஷர்மா

முதல் நான்கு போட்டிகளிலும் ரோஹித் ஷர்மா மைதானத்துக்கு வருவதும், இருபது பந்துகளைக்கூட சந்திக்க முடியாமல் பெவிலியன் திரும்புவதுமாக இருந்தார். இதனால் ரோஹித் ஷர்மாவுக்கு சொதப்பல் அணியில்  நிச்சயம் இடம் இருக்கிறது. டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோஹித் ஷர்மா  ஒருதின போட்டிகளில் சொதப்பித் தள்ளினார். கடைசி போட்டியில் சில ஓவர்கள் அதிரடியாக விளையாடுவதைத் தவிர்த்துப்பார்த்தால், ரோஹித்தால் இந்திய அணிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஃபார்ம் அவுட்டில் இருந்ததால் ரோஹித்தின் பொறுப்பையும் கூடுதலாக சுமந்தது கோலிதான். இப்படி தொப்பலாக சொதப்பிய ரோஹித் தான் மோசமான அணியின் தொடக்க வீரருக்கு தகுதியான நபர்.

சான்ட்னர்

மிட்சேல் சான்டனர் பட்டியலுக்குள் வந்தது கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருக்கும். பல சமயங்களில் இந்திய வீரர்களுக்கு கடும் சவால் அளித்தார். ஆனால் அவரால் விக்கெட்டுகளை வீழ்த்தவே முடியவில்லை. அஷ்வினுக்கு இணையாக நியூசிலாந்து அணிக்கு ஜொலிப்பார் என எதிர்ப்பாரத்தால் கம்மென உட்கார்ந்துவிட்டார். இதனாலேயே  தொடர் முடிவில் சான்ட்னர் பாக்கெட்டில் பெரிய அளவில் விக்கெட்டுகள் இல்லை.

ரோஞ்சி

டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து சார்பாக விளையாடியதில் அதிக ரன்கள் எடுத்தது ரோஞ்சி தான். டெஸ்டில் ஜஸ்ட் பாஸாகி தப்பித்தவர், ஒருநாள் போட்டிகளில் ஒன் டிஜிட் ஸ்கோர்களாக எடுத்து கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்கிறார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரோஞ்சி சரியாகவே விளையாடவில்லை. மூன்று ஒருதின போட்டியிலும் சேர்த்து மொத்தமாக (0,6,1) ஏழு ரன்களை எடுத்திருக்கிறார். வழக்கமாக அவ்வளவு சீக்கிரம் வீரர்களை அணியில் விட்டு நீக்கும் பழக்கம் இல்லாத வில்லியம்சன் கடுப்பாகி கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் இவரை அணியில் சேர்க்கவில்லை.

வாட்லிங்

வாட்லிங் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தான். சூழல் மண்ணில் ஸ்கோர் குவிக்க முடியாமல் திக்கித் திணறியது இந்தக் கிவி. டெஸ்ட் போட்டிகளில் ஆறு இன்னிங்ஸிலும் சேர்த்து 111 ரன்கள் எடுத்தார். ரோஞ்சி சரியில்லை என  வாட்லிங்கை கடைசி இரண்டு போட்டிகளுக்கு விக்கெட் கீப்பராக இறக்கினார் வில்லியம்சன். ஒரு போட்டியில் 14 ரன், இன்னொரு போட்டியில் டக் அவுட் என திருப்திப் பட்டுக் கொண்டார் வாட்லிங் . இதனால் ஒருதின தொடர் முழுவதும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் நொறுங்கிப்போனது நியூசி. 

மற்ற வீரர்கள் யார் யார் என்பதை தெரிந்துக் கொள்ள இந்த ஆல்பத்தை கிளிக்  செய்யுங்கள்  

- பு.விவேக் ஆனந்த் 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close