Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

88-வது நிமிடத்திலா கோல் போடுவாங்க? #ISL

 

ஐ.எஸ்.எல். லீக் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

 

சென்னையின் எஃப்.சி. மற்றும் மும்பை சிட்டி அணிகள் மோதிய ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் போட்டி சென்னை நேரு மைதானத்தில் நடந்தது. சஸ்பெண்ட் காரணமாக சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் மார்கோ மடராசி இல்லாததால் , உள்ளூர் ஆளான துணை பயிற்சியாளர் சபீர் பாஷா அணியை வழி நடத்தினார்.

 

 

வழக்கத்துக்கு மாறாக சென்னை அணியில் ஆறு இந்திய வீரர்கள் பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருந்தனர். முதல் இருபது நிமிடங்கள் வரை இரு அணிகளும் கோல் கணக்கை தொடங்கவில்லை. சென்னையின் ஸ்ட்ரைக்கர் மொரிசியோ பெலுசோ அடித்த ஃப்ரி கிக் ஷாட்டை டைவ் அடித்து தடுத்தார் மும்பை கோல் கீப்பர் அல்பினோ கோம்ஸ்.

 

 

26-வது நிமிடத்தில் ஓபன் நெட்டில் கிடைத்த வாய்ப்பை அப்படியே கோல் அடிக்காமல் பாஸ் செய்கிறேன் என வீணடித்தார் தோய் சிங். மும்பை தரப்பிலோ கோல் அடிப்பதை காட்டிலும் தடுப்பாட்டத்திலேயே குறியாக இருந்தனர்.  அச்சுறுத்தலாக இருப்பார் என கணிக்கப்பட்ட மும்பை கேப்டன் ஃபோர்லானை கோல் பக்கமே நெருங்கவிடவில்லை சென்னை டிஃபண்டர்கள்.

 

 

தோய் சிங் கோல் அடிப்பதில் தடுமாறினாரே தவிர ரைட் விங்கில் இருந்து வகையாக கிராஸ் கொடுக்க தவறவில்லை. அதேபோல லெஃப்ட் விங்கில் இருந்தும் பெலுசோ சான்ஸ் கிரியேட் செய்து கொண்டிருந்தாரே தவிர கோல் அடிக்கவில்லை. இந்த இடத்தில் இலானோ, மெண்டோஸா போன்றவர்களின் இல்லாமையை உணரமுடிந்தது.அதேநேரத்தில்  பெனால்டி பாக்சுக்கு வெளியே லாவகமாக கிடைத்த ஒரு ஷாட்டையும் துல்லியமாக அடித்து தான் ஒரு நட்சத்திர வீரர் என்பதைக் காட்டினார் மும்பைக்காக விளையாடும் உருகுவேயின் டீகோ ஃபோர்லான். நல்ல வேளையாக அது கோலாகவில்லை. ஜஸ்ட் மிஸ். நிம்மதி அடைந்தனர் சென்னை ரசிகர்கள். இடைவேளையின்போது இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

 

இரண்டாவது பாதியை சுறுசுறுப்புடன் தொடங்கியது சென்னை. 51-வது நிமிடத்தில் சென்னை அணிக்கு கார்னர் கிக் கிடைத்தது. பெலுசோ அளந்து எடுத்தது போல் கொடுத்த கிராஸை அசால்டாக தலையால் முட்டி கோல் அடித்து, சென்னை அணியின் கொண்டாட்டத்துக்கு வழி வகுத்தார் ஜெஜே. அடுத்த நிமிடமே அதை சரி செய்ய மும்பைக்கு வாய்ப்பு கிடைத்தது. நல்லவேளையாக 6 யார்டு பாக்ஸில் வைத்து நடந்த களேபரத்தை டக்கென கிளியர் செய்து சென்னையின் மானம் காத்தார் மெண்டி.

 

 

கோல் அடித்தபோது கூட அவ்வளவு சத்தம் இல்லை. ரைட் விங்கில் இருந்து எதிரணி வீரர்களை ஏமாற்றி ஜெஜே டிரிபிளிங் செய்து அழகாக டுடுவுக்கு செட் செய்து கொடுக்க, அரங்கமே கைதட்டி ஆர்ப்பரித்தது. ஆனால் அதை டுடு கோல் கீப்பர் கையில் அடித்து ஏமாற்றினார். ஒரு கட்டத்தில் மும்பைக்கு ஃப்ரி கிக் மற்றும் அடுத்தடுத்து கார்னர் வாய்ப்பு கிடைத்தன. மும்பையின் துரதிர்ஷ்டம் பார் வரை சென்ற பந்து உள்ளே நுழைய மறுத்து விட்டது.

 

 

கடைசி பத்து நிமிடத்தில் மும்பை சுதாரிக்க, ஆட்டம் சூடுபிடித்தது. தப்பித்தவறிகூட ஃபோர்லானிடம் பந்து போகக்கூடாது என தெளிவாக காய் நகர்த்தினர் சென்னை வீரர்கள். ஆனால் யாருமே எதிர்பாரத வகையில் 88-வது நிமிடத்தில், பெனால்டி பாக்ஸுக்கு வெளியே இருந்து பவர்ஃபுல் ஷாட் மூலம்  கோல் அடித்து ஆச்சரியப்படுத்தினார் மும்பையின் லியோ கோஸ்டா. ஆட்டம் சமநிலை அடைந்தது.


 

இஞ்சுரி டைமில் எவ்வளவோ நெருக்கிப் பார்த்தும் சென்னையால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் 1-1 என மேட்ச் டிரா ஆனது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close