Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கபடி வீரர்களுக்கு பரிசு தொகை அறிவிப்பு

உலகக் கோப்பை கபடி சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த அனைவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில், விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய்கோயல் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து, உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்த தமிழக கபடி வீரர் சேரலாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்திருந்தார், அப்போது அவர், 'தமிழகத்தில் இருந்து நிறைய பேர் கபடி விளையாட வரவேண்டும். நான் ஓய்வு பெற்ற பிறகு, தமிழகம் முழுவதும் பயணம் செய்து கபடி விளையாடுவதற்கு பயிற்சியளிப்பேன்' என்று கூறியுள்ளார்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ