Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆஸியை., வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா

பெர்த்தில் நடந்து வந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி, தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், தென் ஆப்ரிக்கா அணி ஆஸ்திரேலியாவை 177 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க்கடித்தது.

539 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆட ஆரம்பித்த ஆஸ்திரேலியா, 361 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக க்வாஜா 97 ரன்கள் எடுத்தார். நீவில் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில், ககிசோ ரபதா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். காயம் காரணமாக, தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன், போட்டியிலிருந்து பாதியிலேயே விலகினார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ