Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பி.சி.சி.ஐ.க்கு தற்காலிக அனுமதி அளித்தது உச்ச நீதிமன்றம்

ராஜ்கோட்டில் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ள இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கு நிதி வழங்க பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

லோதா கமிட்டியின் சீர்திருத்த நடவடிக்கைகளை அமல்படுத்தாமல் இருந்ததால், பிசிசிஐ எவ்வித நிதி பரிவர்த்தனையும் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, இந்தியா- இங்கிலாந்து இடையே முதல் டெஸ்ட் போட்டி வரும் 9-ம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், நிதி வழங்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ வழக்கு தொடர்ந்தது. அதில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணிக்கு செலவு செய்ய எந்த நிதியும் இல்லை என்று கூறி இருந்தது. இதனால், டெஸ்ட் தொடர் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், நிதி வழங்க பிசிசிஐக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close