Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கபடியை ஊக்குவிக்க யுவராஜ்சிங் நிதி

இந்தியாவில் கபடியை ஊக்குவிக்க கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ரூ.5 லட்சம் நிதி அளித்துள்ளார். இந்தியா கபடி அணி அண்மையில் மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வென்றிருந்தது. இதையடுத்து இந்தியாவில் கபடி விளையாட்டை ஊக்குவிக்க இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் யுவராஜ் சிங் ரூ.5 லட்சம் நிதி அளித்துள்ளார். இதுகுறித்து யுவராஜ் கூறுகையில்,  'கபடியை ஊக்குவிக்க நாம் ஒவ்வொருவரும், நமது சிறு பங்களிப்பை வழங்க வேண்டும். உலகக்கோப்பை வென்றவர்களை  ஊக்குவிப்பது, கபடியில் புதிய வீரர்களை உருவாக்‌குவது அவசியம். நான் கபடி அணியில் இல்லாவிடினும் ஒரு விளையாட்டு வீரராக நம் நாட்டில் கபடியை ஊக்குவிக்க எனது பங்களிப்பை வழங்குகிறேன்'. என்று கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ