Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேப்டனின் மகன் விஜய் பிரபாகரன் அணிக்கு மீண்டும் ஆடுகிறார் பி.வி. சிந்து!

சிந்து

பல நாடுகளும் பதக்கங்களைக் குவித்துவந்த வேளையில்,  கடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கான முதல் பதக்கம், வெள்ளி.  அதை பெற்றுத்தந்த இந்தியாவின் தங்க மகள் பி.வி.சிந்து. இவர், மீண்டும் சென்னை ஸ்மாஷர்ஸ் அணிக்காக விளையாடவிருக்கிறார். 

பிரிமியர் பேட்மிண்டன் லீக் தொடரின் இரண்டாவது சீசன் தொடங்கவிருக்கிறது. வரும் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் 14ந் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில் டெல்லி, மும்பை, சென்னை, ஐதராபாத், பெங்களூரு, லக்னோ உள்ளிட்ட ஆறு அணிகள் விளையாடவிருக்கின்றன. 

கடந்த ஆண்டு நடைபெற்ற பிபிஎல் முதல் சீசன் போட்டியில், சென்னை ஸ்மாஷர்ஸ் அணிக்காக பி.வி.சிந்து ஒப்பந்தம் செய்யப்பட்டார்.  சிறப்பான ஆட்டத்தை வெளியப்படுத்திய பிவி சிந்து மும்பையில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடினார். எனினும் எதிர்பாராத விதமாக அவரது வெற்றி  நூலிழையில் நழுவியது.  மும்பையில் நடைபெற்றப் போட்டியை கேப்டன்
விஜயகாந்த் தனது கும்பத்தினருடன் நேரில் சென்று கண்டுகளித்தார்.

கடந்த போட்டியில்  சென்னை ஸ்மாஷர்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினால் அதில் கிடைக்கும் பரிசு தொகையை சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என அணியின் உரிமையாளர் விஜய் பிரபாகர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

பிரிமியர் பேட்மிண்டன் லீக் தொடரின் இரண்டாவது சீசனுக்கான,  வீரர்-வீராங்கனைகளின் ஏலம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்தியாவின்  பி.வி. சிந்துவை   தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகனும் சென்னை ஸ்மாசர்ஸ் அணியின் உரிமையாளருமான விஜய் பிரபாகரன்  39 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.

அதேபோல்  தனாங்சக்  30 லட்சத்துக்கும், கிரிஸ் அட்காக் 29 லட்சத்துக்கும் கேப்ரியல் அட்காக் 29 லட்சத்துக்கும் சென்னை ஸ்மாஷர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.  டாமி சுகியார்தோ 26 லட்சத்துக்கும்,  மேட்ஸ் பில்லர் கோல்டிங் 25 லட்சத்துக்கும்,   கஷ்யப் 8 லட்சத்துக்கும்,  சுமித் ரெட்டி - 5 லட்சத்துக்கும்,  ரம்யா துளசி - 3 லட்சத்துக்கும்,  அருந்ததி பாண்டாவேன் – 3 லட்சத்துக்கும் சென்னை ஸ்மாசர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

சென்னை ஸ்மாஷர்ஸ் அணிக்கான இந்த சீசன் கேப்டன் பி.வி.சிந்து தான்.  ஒலிம்பிக்கில் கிடைத்த வெற்றியால், இந்த சீசனில் நிச்சயம் இவர் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறது ஸ்மாஷர்ஸ் டீம்.

- வாழ்த்துகள் டீம்...!

”சிந்து, எங்க பேட்மிண்டன் டீமாக்கும்!” ‘கேப்டன்’ மகன் விஜய பிரபாகரன் பேட்டியை படிக்க க்ளிக்குக!

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ