Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உணவு இடைவேளை: இந்தியா 162/1‍- விஜய், புஜாரா அசத்தல்

ராஜ்கோட்டில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் முரளி விஜய், புஜாரா அரை சதம் அடித்து அசத்தினர். உணவு இடைவேளை முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 162 ரன்கள் எடுத்துள்ளது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 537 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ரூட் (124), அலி (117), ஸ்டோக்ஸ் (128) ஆகியோர் சதம் விளாசினர். இந்தியா தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. நேற்று 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர்கள் முரளி விஜய் 25 ரன்னிலும், கம்பீர் 28 ரன்னிலும் களத்தில் இருந்தனர். இன்று 3வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. கம்பீர் ஒரு ரன் சேர்ப்பதற்குள் 29 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து புஜாரா களம் இறங்கினார். இவர் முரளியுடன் ஜோடி சேர்ந்து  ரன் குவிப்பில் ஈடுபட்டார். இருவரும் அபாரமாக விளையாடி அரை சதம் விளாசினர். முரளி விஜய் 15வது அரை சதத்தையும், புஜாரா 11வது அரை சதத்தையும் நிறைவு செய்தனர்.

உணவு இடைவேளை முடிவில், இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 162 ரன்கள் எடுத்துள்ளது. முரளி விஜய் 57 ரன்னிலும், புஜாரா 62 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ