Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: விஜய், புஜாரா அசத்தல் சதம்

ராஜ்கோட்டில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முரளி விஜய், புஜாரா சதம் அடித்து அசத்தியுள்ளனர்.

இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் 3-ம் நாள் ஆட்டத்தில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது. இன்றைய ஆட்டத்தின் தொடக்கத்தில் கம்பீர் 29 ரன்களுக்கு அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து புஜாரா, விஜய் ஜோடி, நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இதையடுத்து முரளி விஜய், தனது 7வது சதத்தையும், புஜாரா 9வது சதத்தையும் நிறைவு செய்தனர்.

தற்போது இந்திய அணி, 1 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.  விஜய் 103 ரன்னிலும், புஜாரா 112 ரன்னிலும் களத்தில் உள்ளனர். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close