Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தெ.ஆ.வுடன் 2வது டெஸ்ட்: 85 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 85 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது ஆஸ்திரேலியா.

டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி, ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்யச் சொன்னது. விக்கெட்டுகளை வேகமாக பறிகொடுத்து, 85 ரன்களிலேயே முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது ஆஸ்திரேலியா. தென் ஆப்ரிக்கா சார்பில், ஃபிலாண்டர் 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.


இதனைத் தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை ஆட ஆரம்பித்த தென் ஆப்ரிக்கா, 90 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகின்றது. இன்னும் முதல் நாள் ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ