Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை பயிற்சியாளருக்கு பதிலடி கொடுக்க ஜிடேன் முகமூடி அணியும் கேரள ரசிகர்கள்!

ஜிடேன் முகமூடி

கொச்சி சூப்பர் லீக் கால்பந்து தொடருக்கு ரசிகர்கள் ஜிடேன் முகமூடி அணிந்து வரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிரிபுதிரி பரபரப்பாகியுள்ளது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று கொச்சியில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை அணியுடன் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி மோதுகிறது. 

ஐஎஸ்எல் போட்டியின் இந்த மோதல் 'சவுத் இண்டியன் டெர்பி' என்று அழைக்கப்படுகிறது. சென்னையின் எப்.சி அணியின் பயிற்சியாளரான  மார்கோ மெட்ரசி உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர். இத்தாலியைச் சேர்ந்த இவர் கடந்த 2006ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது நடந்த விரும்பத்தகாத சம்பவத்தால் மிகவும் பாப்புலராகவும் ஆனார். 

பெர்லினில் நடந்த இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியுடன் இத்தாலி அணி மோதியது.இந்த போட்டியின் போது பிரான்ஸ் அணியின் கேப்டன் ஜினடேன் ஜிடேனுடன் மார்கோ மெட்ரசிக்கு வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் ஜினடேன் ஜிடேன் மெட்ரசியை மார்பில் முட்டித் தள்ளினார். உலகம் முழுக்க கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் இது. உடனடியாக சிவப்பு அட்டை பெற்ற ஜிடேன் களத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். இத்தாலி அணி டைபிரேக்கரில் வெற்றி பெற்று உலகக் கோப்பையை வென்றது. அந்த மார்க்கோ மெட்ரசிதான் தற்போது சென்னை அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.

மார்கோ மெட்ரசி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் ரகம்தான். ஐஎஸ்எல் முதல் சீசனில் சென்னை அணியை கேரள அணி அரையிறுதியில் வீழ்த்தியது. அப்போது மார்கோ மெட்ரசி கேரளா பிளாஸ்டர் அணி வீரர்களிடம் விதிகளுக்கு புறம்பாக நடந்து கொண்டதால், சஸ்பென்ட் செய்யப்பட்டார். தற்போது அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று கொச்சியில் நடைபெறும் ஆட்டத்தில் ஜினடேன் ஜிடேனின் முகமூடி அணிந்து கேரள ரசிகர்கள் போட்டியை காண வரப் போகிறார்களாம். இதற்காக சுமார் 35 ஆயிரம் ஜிடேன் முகமூடிகள் விற்பனையாகியுள்ளன. 

இது குறித்து மார்கோ மெட்ரசியிடம் கேட்டால், ''அவர்கள் முகமூடிக்கு செலவழிக்கிறார்கள். நான், உணவுக்காக செலவழிப்பேன்'' என்றார்.

-எம்.குமரேசன்

 


 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close