Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவுக்கு 310 ரன்கள் இலக்கு


இந்தியா-இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட்டின் முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 537 ரன்களும், இந்தியா முதல் இன்னிங்ஸில் 488 ரன்களும் எடுத்தன.

இதையடுத்து நேற்று இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸிலும் அந்த அணி சிறப்பான பேட்டிங்கை விளையாடியது. அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.

அதிகபட்சமாக குக் 130, ஹமீது 82 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். மிஸ்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 310 ரன்கள் இலக்குடன் இந்தியா சற்று நேரத்தில் களமிறங்குகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close