Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'முடி கொட்டியதால் சரியாக விளையாட முடியவில்லை!' அச்சச்சோ மோஹித் சர்மா


டுகளம் சரியாக அமையவில்லை, காற்றின் வேகம் அதிகமாக இருந்தது, வெளிச்சம் குறைவு என்று பல காரணங்களை கிரிக்கெட் வீரர்கள் சரியாக விளையாடாததற்கு கூறியுள்ளார்கள். இந்த வரிசையில் இப்போது புது விதமான காரணத்துடன் மோஹித் சர்மா இணைந்துள்ளார்.  கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவின் மிக முக்கியமான பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் மோஹித். எட்டு போட்டிகளில் பதிமூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேலும் சச்சினின் கடைசி ரஞ்சி போட்டியில் அவரின் விக்கெட்டை வீழ்த்தியவர் மோஹித் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த வருடம் நடைபெற்ற டி 20 உலகக்கோப்பையில் அணியில் இருந்து கூட ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை மோஹித். அவர் கடைசியாக ஆடிய ஒரு நாள் போட்டி தென் ஆஃப்ரிகாவிற்கு எதிராக தான். அந்த போட்டியில் பத்து ஓவர்களில் எண்பத்து நான்கு ரன்களுக்கு விளாசப்பட்டார்.

இதையடுத்து அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. ஒரு தொடரில் சரியாக விளையாடாததால் அணியிலிருந்து மோஹித் நீக்கப்பட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  இருபத்து ஆறு ஒரு நாள் போட்டிகளில் முப்பத்து ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள மோஹித் தற்போது ரஞ்சி போட்டிகளில் விளையாடி வருகிறார்.

அவரிடம் ஏன் உங்களை சர்வதேச போட்டிகளில் பார்க்க முடியவில்லை என்று கேட்ட போது, "என் முடி கொட்டிகொண்டே இருப்பது என் தன்னம்பிக்கையை குறைத்தது. அது என் பந்துவீச்சில் பிரதிபலித்தது", என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து ட்விட்டர் ஃபேஸ்புக்கில் மீம்களுக்கு ஆளானார்.

முடி கொட்டுவதால் சரியாக விளையாட முடியவில்லை என்றால் சேவாக், கங்குலி எல்லாம் விளையாடியிருக்கவே முடியாதே என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது. இல்லை, எனக்கு அது தான் பிரச்சனை என்று மோஹித் நினைத்தால், நவீன தொழில்நுட்பம் கொண்டு முடி அறுவை சிகிச்சை செய்து அடுத்த ஆண்டு நடை பெறவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ராப்ஃபி போட்டிக்கு ரெடி ஆகலாமே!!

- ம. சக்கர ராஜன்
(மாணவப்பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ