Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தென்ஆப்ரிக்காவில் இப்படி ஒரு ஃபீல்டர்! ஈஸி கேட்ச்சை மிஸ் செய்த எல்கர் (வீடியோ)

 

எல்கர்

தென் ஆப்ரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 85, தென் ஆப்ரிக்கா 326 ரன்கள் எடுத்தன. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை ஆடிக் கொண்டிருந்தது.   டீன் எல்கர் என்ற சீனியர் ப்ளேயர் மூன்றாவது ஸ்லிப்பில்  இருந்தார். அப்போதுதான் அந்த ஷாக் சம்பவம்  நிகழ்ந்தது.

தென் ஆப்ரிக்காவின் கைல் அபோட்  ஆஃப் சைடில் வீசிய பந்தை டேவிட் வார்னர், ஓங்கி அடித்தார். பந்து மூன்றாவது ஸ்லிப்பில் இருந்த டீன் எல்கர் தலைக்கு மேலே பவுண்டரிக்கு சென்றது. ஆச்சரியம்  என்னவெனில் கேட்ச் பிடிப்பதற்கு ஏதுவாக குனிந்த நிலையில் இருந்தார் எல்கர். ஆனால், பந்து பேட்டில் பட்டு பறந்து வந்தபோதும் அவர் நிமிரவே இல்லை. எளிதான கேட்ச்சை மிஸ் செய்தார். மிஸ் என்பதை விட அதற்கான முயற்சியே செய்யாமல் இருந்ததைப் பார்த்து விக்கெட் கீப்பர் டி காக், வாயில் விரல் வைத்து விக்கித்து நின்றார். மிச்சத்தை நீங்களே பாருங்க...

 

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close