Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புஜாரா, கோலி சதம் விளாசல்..! நிமிர்ந்தது இந்திய அணி

விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் புஜாரா, கோலி சதம் விளாசினர். இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 22 ரன் சேர்ப்பதற்குள் 2 விக்கெட்டை பறிகொடுத்தது. முரளி விஜய் 20 ரன்னில் ஆட்டம் இழந்தார். ராகுல் டன் அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து புஜாரா- கோலி ஜோடி நிதானமாக விளையாடி ரன் குவிப்பு ஈடுபட்டது.

புஜாரா, இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்து சதம் விளாசினார். இவர் அடிக்கும் 10-வது சதமாகும். மறுமுனையில் நன்றாக விளையாடி வரும் கேப்டன் கோலி தனது 14-வது சதத்தை நிறைவு செய்தார்.

தற்போது இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 100 ரன்னிலும், புஜாரா 108 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ