Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளரானார் ஜெயவர்தனே

ஐ.பி.எல் ரேஸில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி மும்பை இந்தியன்ஸ். இதன் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இருந்தார். ஐ.பி.எல்லின் தொடக்க சீசன்களில் மும்பை அணிக்காக விளையாடியுள்ளார் பாண்டிங். குறிப்பாக இவர் பயிற்சியாளராக இருந்த கடந்த ஆண்டு சீசனில் கூட மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன்  ஜெயவர்தனே இந்த ஐபிஎல் சீசன் முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயவர்தனே ஏற்கெனவே பஞ்சாப், கொச்சி, டெல்லி அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ