Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செல்லாத நோட்டு பிரச்னைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களும் தப்பவில்லை!

இந்த மாதம் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பழைய 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறினார். இதையடுத்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் புதிய ரூபாய் நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன. எனினும் தினசரி செலவுகளுக்கு பழைய நோட்டுகளை பயன்படுத்தி வந்த மக்களுக்கு இது பெரிய சிரமத்தை உருவாக்கியது. சாதாரண மக்களுக்கு தான் இந்த கதி என்று பார்த்தால், இந்தியாவில் சுற்றுப் பயணம் கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் இதே கதி தான். 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து 19 நாட்கள் ஆகின்றன. எனினும், அவர்களுக்கு தர வேண்டிய தினசரி செலவு தொகையான ஐம்பது பவுண்ட் (4200 ரூபாய்) இன்னும் ஒரு நாள் கூட அவர்களுக்கு  தரப்படவில்லை. இதற்கு காரணம் என்னவென்று விசாரித்த போது, இந்திய-இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே கையெழுத்து ஆக வேண்டிய புரிந்துணர்வு  ஒப்பந்தம் (MOU - MEMORANDUM OF UNDERSTANDING) இன்னும் கையெழுத்து இடப்படவில்லையாம். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தான் தினசரி செலவுக் கணக்கும் அடங்குமாம்.

இதைப் பற்றி விளக்கம் அளித்த பி.சி.சி.ஐ, ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடால் ஒப்பந்தத்தை கையெழுத்து இட முடியவில்லை என்று கூறியுள்ளது. என்ன தான் உச்ச நீதிமன்றம் ஒரு போட்டிக்கு ரூபாய் 58.6 லட்சம் ஒதுக்கி இருந்தாலும், அந்த தொகையில் தினசரி செலவுகள் அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினசரி செலவுகள் கொடுக்கப்படவில்லை என்று ஒரு இங்கிலாந்து  அணி அதிகாரி உறுதிபடுத்தியுள்ளார். எனினும், அம்பயர்கள் மற்றும் இந்திய அணி வீரர்களுக்கு தினசரி செலவுக்கான தொகை கொடுக்கப்படுகிறது. என்னதான் இங்கிலாந்து வீரர்கள் தேவைப்படும்போது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினாலும், ரூபாய் நோட்டுகள் இல்லாதது  சிரமத்தை உருவாக்கியுள்ளது. 

இதை பற்றி லோதா கமிட்டி பி.சி.சி.ஐக்கு அனுப்பிய மின்னஞ்சல்,

"புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது இரண்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே நடக்க வேண்டியது. அதற்கும் எங்களுக்கும் சம்மந்தம் கிடையாது. பண பரிமாற்றத்தைப் பொறுத்தவரை, பி.சி.சி.ஐக்கு நேராக ஒதுக்கப்படும் தொகைக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது."

- ம. சக்கர ராஜன்,

மாணவப் பத்திரிகையாளர்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ