Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெஸ்ட் தரவரிசை: இந்தியா நம்பர் ஒன்; கோலி முன்னேற்றம்

 

டெஸ்ட் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் 115 புள்ளிகளுடன் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. விராட் கோலியை பொறுத்தவரை ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் டாப்பில் இருந்தாலும் டெஸ்ட் தரவரிசை டாப் 10 டென்னில் இத்தனை நாட்கள் இல்லை.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோலி 167, 81 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் தரவரிசையில் ஜெட் வேகத்துக்கு முன்னேறியுள்ளார் அவர். அதன்படி, 9 இடங்கள் முன்னேறி தற்போது 4-வது இடத்தில் உள்ளார் கோலி.

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் சிறந்த நிலை இதுதான். புஜாரா ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தில் உள்ளார். அதே போல் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஜடேஜா ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தில் உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ