Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவிலும் இப்படித்தானா... நிருபர் மீது சென்னை கோச் மடராசி அதிருப்தி!


‛இத்தாலியில், ஜெர்மனியில், இங்கிலாந்தில் என உலகில் எங்கு பார்த்தாலும் நிருபர்கள் ஒரே மாதிரித்தான் இருக்கிறார்கள். இந்தியாவும் அதற்கு விதி விலக்கு அல்ல. எல்லா நேரத்திலும் எல்லோரையும் என்னால் திருப்திப்படுத்த முடியாது. உள்ளூர் வீரரை ஏன் களமிறக்கவில்லை என நீங்கள் கேட்கலாம். ஆனால், அணி தோல்வி அடைந்து விட்டால், என்னிடம்தான் நிர்வாகம் கேள்வி கேட்கும். பிளேயிங் லெவனைத் தீர்மானிக்கும் உரிமை எனக்கு இருக்கிறது’ என, சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் சீறினார்  ஐ.எஸ்.எல்., தொடரில் சென்னையின் எஃப்.சி., தலைமை பயிற்சியாளர் மார்கோ மடராசி.

சென்னை அணி தற்போது நடப்பு சாம்பியனாக இருப்பதற்கும், முதல் சீசனில் அரையிறுதி வரை முன்னேறியதற்கும் முழு முதற் காரணம் இந்த இத்தாலிக்காரர்தான். இந்த சீசனில் அடுத்தடுத்த தோல்விகளில் சென்னை ஏழாவது இடத்தில் இருப்பதற்கும் சாட்சாத் அவர்தான் காரணம். எஞ்சியுள்ள நார்த்ஈஸ்ட், கோவா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெறவில்லை எனில்,  சென்னை செமி ஃபைனலுக்கு முன்னேறாது. 

கடந்த சீசனிலும் சென்னை இப்படித்தான் புள்ளிகள் பட்டியலில் பின்தங்கி இருந்தது. மடராசியின் தீர்க்கமான முடிவுகளால், அடுத்தடுத்து வெற்றி பெற்று செமி ஃபைனலுக்கு முன்னேறி, இறுதியில் கோப்பையும் வென்றது. ஆனால், இந்த முறை அதற்கு வாய்ப்பு கம்மி. இதைக் கணித்த ஒரு ஆங்கிலப் பத்திரிகை ‛இந்த சீசனில் சென்னை செமி ஃபைனலுக்கு முன்னேறவில்லை எனில், நான் அடுத்த சீசனில் இந்தியாவுக்கு வர மாட்டேன்’ என மடராசி சொன்னதாக செய்தி வெளியிட்டது. இதைக் கேள்விப்பட்ட மடராசி அதிருப்தி அடைந்தார். 

மும்பையிடம் நேற்று தோல்வியடைந்ததும், பத்திரிகையாளர் சந்திப்பில் தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார், டேஞ்சரஸ் டிஃபண்டர் என பெயரெடுத்த மடராசி. ‛‛ சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை எனில், நான்  அடுத்த சீசன்  இங்கு வர மாட்டேன் என உங்களில் (நிருபர்) ஒருவர் சொல்லி இருக்கிறார். நான் ஒருபோதும் இப்படிச் சொன்னதில்லை. இனிமேலும் சொல்ல மாட்டேன். இந்த வார்த்தைகள் என்னை காயப்படுத்தி விட்டன. கால்பந்து என்பது மற்ற நாடுகளில் இருப்பதைப் போல, இந்தியாவில் இருக்காது என்று நினைத்திருந்தேன். இந்தியாவில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது என நம்பினேன். ஆனால், இங்கும் அப்படித்தான் நடக்கிறது.  என்ன நினைத்து அந்த வார்த்தைகளை எழுதினார் என்பதை அந்த நிருபர் விளக்க வேண்டும்’’ என நிதானம் இழந்தார் மடராசி.

 உடனே சப்ஜெக்டை வேறு பக்கம் திருப்பினர் நிருபர்கள். சென்னையின் தொடர் தோல்விகளுக்கு, மடராஸி பிளேயிங் லெவனை ஒவ்வொரு போட்டியிலும் மாற்றிக் கொண்டே இருப்பதும் ஒரு காரணம். இதுகுறித்த கேள்விக்கு ‛‛தலைமைப் பயிற்சியாளர் என்ற முறையில் அணியைத் தேர்வு செய்வதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. ரிசல்ட் என்னவாக இருந்தாலும் அதற்கும் நானே பொறுப்பு. இதுவரை நான் எடுத்த முடிவுகளில் கிளப் திருப்தி அடைந்துள்ளது. இனிமேல் நடக்க இருப்பது குறித்து நாங்கள் பேசுவோம். சென்னை அணியுடனான என் எதிர்காலம் குறித்து நான் மட்டுமே முடிவு செய்திட முடியாது. நான் எப்போதுமே சென்னைக்கு ஆதரவாக இருப்பேன்’’ என பேட்டியை முடித்துக் கிளம்பினார் மடராசி.


- தா.ரமேஷ் 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close