Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹாங்காங் ஓபன் பேட்மின்டன்: பி.வி. சிந்து, சமீர்வர்மா இறுதிசுற்றுக்கு முன்னேற்றம்

ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து இறுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில் அவர் ஹாங்காங்கின் சியுங்-கன்-யி யை 21-14,21-16 செட் கணக்கில் வீழ்த்தினார். அதே போல் ஆடவர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சமீர்வர்மா, உலகின் மூன்றாம் நிலை வீரரான ஜார்ஜென்சனுடன் மோதினார். இதில் சமீர்வர்மா உலக தரவரிசையில் 42-ம் நிலை வீரர் ஆவார். விறு,விறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 21-19 24-22 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சமீர் இறுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளார்.  இவர்களுக்கான இறுதிசுற்று நாளை நடைபெறுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ