Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 271/6

இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி மொஹாலியில் நடந்து வருகிறது. இதில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்துள்ளது. அஸ்வின் 57, ஜடேஜா 31 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் கோலி 62 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.  புஜாரா 51 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியில் ரஷித் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்தை விட இந்தியா 12 ரன்கள் பின்தங்கியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ