Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விகாஷ் க்ரிஷனுக்கு ஆண்டின் சிறந்த குத்துச்சண்டை வீரருக்கான விருது

இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஷ் க்ரிஷனுக்கு ஆண்டின் சிறந்த குத்துச்சண்டை வீரர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச குத்துச்சண்டை அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த குத்துச்சண்டை வீரருக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி, இந்தாண்டு இவ்விருது இந்தியாவின் விகாஷ் க்ரிஷனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விகாஷ் இந்த விருதை பெறும் முதல் இந்தியர் ஆவார். அவருக்கு டிசம்பர் 20-ம் தேதி இந்த விருது வழங்கப்படுகிறது. 24 வயதான விகாஷ் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர். விகாஷ் தற்போது பயிற்சிக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இதுகுறித்து விகாஷ் கூறுகையில், "இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்தான். ஆனால், இந்தாண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க முடியாத வருத்தத்தில் உள்ளேன். எனவே, இதனால் மிகுந்த மகிழ்ச்சி என்று சொல்லிவிட முடியாது" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close