Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபார்முலா-1 சாம்பியன் ராஸ்பெர்க்!

ஃபார்முலா-ஒன் 2016 சாம்பியன் ஷிப் அபுதாபியில் நடந்தது. இதில் 385 புள்ளிகளுடன் மெர்சிடீஸ் அணியின் நிக்கோ ராஸ்பெர்க் இந்த ஆண்டுக்கான சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு  டப் ஃபைட் கொடுத்த, அதே அணியைச் சேர்ந்த லூயி ஹேமில்டன் 380 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார். ரெட்புல் அணியின் செபாஸ்டியன் வெட்டல் மூன்றாம் இடம் பிடித்தார். ராஸ் ஃபார்முலா-1 சாம்பியன் பட்டம் பெறும் 33-வது நபர் ஆவார். இந்த ரேஸில் அணி வாரியாக மெர்சிடீஸ் அணி முதல் இடமும், ரெட் புல் இரண்டாமிடமும், ஃபெராரி மூன்றாம் இடமும் பிடித்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் சஹாரா ஃபோர்ஸ் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. ஃபார்முலா-1 ரேஸில் இந்திய அணி ஒன்றின் சிறந்த நிலை இதுதான்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ