Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரேசில் கால்பந்து வீரர்களின் விமான விபத்து புகைப்படம் வெளியானது

பிரேசில்

பிரேசில் கிளப் கால்பந்து வீரர்கள் பயணித்த விமானம், கொலம்பியாவில் மலைப்பகுதியில் நொறுங்கி விழுந்தது. இதில் பயணித்த வீரர்கள் உள்பட பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

தென் அமெரிக்க நாடுகளில் உள்ள இரண்டாம் நிலை கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே ஆண்டுதோறும் COPA SUDAMERICANAதொடர், 2002ல் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் பிரேசில், அர்ஜென்டினா, சிலி, பெரு, கொலம்பியா, மெக்சிகோ, ஈக்வேடார் நாடுகளில் உள்ள கிளப்கள் பங்கேற்கின்றன.

இந்த ஆண்டுக்கான COPA SUDAMERICANA ஃபைனல் இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளன. முதல் கட்ட ஃபைனல் கொலம்பியாவில் உள்ள மெட்லின் நகரில் புதன்கிழமை நடக்க உள்ளது. இதில் பிரேசிலைச் சேர்ந்த சபிகோயன்ஸ் கிளப் மற்றும் கொலம்பியாவைச் சேர்ந்த அட்லெடிகோ நேசனல் கிளப் அணிகள் மோத இருந்தன. ஃபைனலில் பங்கேற்பதற்காக பிரேசில் சபிகோயன்ஸ் அணியினர் பொலிவியாவில் இருந்து விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர். அந்த விமானத்தில் வீரர்கள் உள்பட 81 பேர்  பயணித்தனர்.

Brazil Football Team

அந்த விமானம் மெட்லின் சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்லும் வழியில், மலைப்பகுதியில் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு நொறுங்கி விழுந்ததாக தகவல் வெளியானது. விபத்து நடந்திருப்பதை மெட்லின் விமான நிலையம்  உறுதிப்படுத்தியது. விமானத்தில் பயணித்தவர்களின் நிலை குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகவில்லை. ஆனால், பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  இருப்பினும், சிலர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இருப்பதாக மெட்லின் நகர மேயர் ஃபெடரிகோ தெரிவித்துள்ளார்.

Brazin plane crash

‛‛பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. ஆம்புலன்ஸ் மற்றும் மீட்புக் குழுவினர்  சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்ததா என தெளிவாகத் தெரியவில்லை’’ என ஃபெடரிகோ தெரிவித்தார். இந்நிலையில் சற்று முன் வெளியான விபத்துக்குள்ளான விமானத்தின் புகைப்படம், அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.  ஆனாலும் விமானம் வெடித்ததாக பதிவாகவில்லை என்பதால் சிலரேனும் உயிரோடு இருக்க வாய்ப்புள்ளதாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மோசமான வானிலை, போதிய வெளிச்சமின்மை காரணமாக மீட்பு நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்படுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக 1958-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்று விட்டு பெல்கிரேடில் இருந்து பிரிட்டன் திரும்பியபோது, விமானம் விபத்தில் சிக்கியதில் எட்டு மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்கள் உள்பட 21 பேர் பலியாகினர்.

- தா.ரமேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ