Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆசிய மகளிர் கிரிக்கெட் இறுதிச்சுற்றில் இந்திய அணி

ஆசிய மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் இன்று இந்தியா-இலங்கை அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிதாலி ராஜ் 62 ரன்கள் எடுத்தார். அடுத்த களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 52 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த தொடரில் இந்தியா பெறும் நான்காவது வெற்றி இது. தொடர் வெற்றிகள் மூலம் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது இந்திய அணி. இந்தியா தனது கடைசி லீக் போட்டியில் நேபாளம் அணியை எதிர்கொள்கிறது. இதையடுத்து புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணியை இந்தியா தனது இறுதிச் சுற்றில் எதிர்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ