Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மகளிர் உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் இந்தியா சாம்பியன்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதிச் சுற்று இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா-தென்ஆப்ரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்கா 244 ரன்களில் ஆட்டமிழந்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில்  9 விக்கெட் இழப்புக்கு ரன்கள் 245 எடுத்து வெற்றி பெற்றது.

Harmeet Kaur

இந்திய அணியின் தீப்தி ஷர்மா 71, மோனா மேஷ்ராம் 59 ரன்கள் எடுத்தனர். அதேபோல், கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவ்ர் 41 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். குறிப்பாக, கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. ப்ரீத்தின் சிறப்பான ஆட்டத்தால் கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பைக்கு முன்னேறியது மட்டுமல்லாமல், தகுதிச்சுற்றில் சாம்பியன் பட்டத்தையும் இந்தியா வென்றுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close