Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

9005 பந்துகளில் 9000 ரன்கள்... கங்குலி சாதனை முறியடிப்பு... அதிர ‘டி’ வில்லியர்ஸ்!

ஒருநாள் கிரிக்கெட்டில் 9005  பந்துகளில் 9 ஆயிரம் ரன்கள் அடித்து தென்ஆப்ரிக்க வீரர் டி வில்லியர்ஸ் புதிய சாதனை படைத்துள்ளார். கங்குலியின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. 

9 ஆயிரம் ரன்கள் அடித்த டி வில்லியர்ஸ்

தென்ஆப்ரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெல்லிங்டனில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென்ஆப்ரிக்க அணி 50 ஓவர்களில் 271 ரன்கள் அடித்தது. தொடர்ந்து பேட் செய்த நியூசிலாந்து அணி 112 ரன்களில் ஆல்அவுட் ஆனது. தென்ஆப்ரிக்க அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்ரிக்க வீரர் டி வில்லியர்ஸ், 80 பந்துகளை சந்தித்து 85 ரன்களை எடுத்தார். இதில் 7 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.

நியூசிலாந்து தொடர் தொடங்குவதற்கு முன், 9 ஆயிரம் ரன்களை எட்ட டி வில்லியர்சுக்கு 87 ரன்கள் தேவைப்பட்டது. ஹாமில்டன் நகரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 37 ரன்கள் எடுத்தார். கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் 45 ரன்கள் அடித்தார். மூன்றாவது ஒருநாள் போட்டியில் 5 ரன்கள் எட்டியபோது ஒருநாள் போட்டி வரலாற்றில் மிக விரைவாக 9 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை டி வில்லியர்ஸ் பெற்றார். இதற்கு டி வில்லியர்சுக்கு 205 இன்னிங்ஸ்களே (போட்டிகள் 214) தேவைப்பட்டது. 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, 228 இன்னிங்ஸ்களில் 9 ஆயிரம் ரன்களை எட்டியதே இதுவரை சாதனையாக இருந்தது. அதற்கு முன்னர் சச்சின் 235 இன்னிங்ஸ்களில் 9 ஆயிரம் ரன்கள் அடித்திருந்தார். தற்போது டி வில்லியர்ஸ்,  கங்குலியை விட 23 இன்னிங்ஸ்களுக்கு முன்னதாகவே இந்த சாதனையை எட்டியுள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் உலகில் 9 ஆயிரம் ரன்களை கடந்த 18-வது வீரர் டி வில்லியர்ஸ். தென் ஆப்ரிக்காவை பொறுத்த வரை இரண்டாவது வீரர். காலீஸ்  9 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் தென்ஆப்ரிக்க வீரர். அவரது ஸ்ட்ரைக் ரேட் 53.86. ஆனால் டி வில்லியர்சின் ஸ்ட்ரைக் ரேட் 99.94. ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்கள் எடுத்து சாதனை படைத்திருக்கும் சச்சினின் ஸ்ட்ரைக் ரேட் 86.23.

9 ஆயிரம் ரன்களை எட்ட டி வில்லியசுக்கு 9,005 பந்துகளே தேவைப்பட்டது. இதற்கு முன், ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் 9,328 பந்துகளில் 9 ஆயிரம் ரன்களை எட்டினார். டி வில்லியஸின் சராசரி 54.04. அடுத்து தோனி 50.96. ஒரு நாள் போட்டியில் டிவில்லியர்சும் தோனியும் மட்டுமே 50க்கு மேல் சராசரி வைத்திருக்கும் வீரர்கள். 

இந்த 9 ஆயிரம் ரன்களில் டி வில்லியர்ஸ் 189 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். கிறிஸ் கெயில் 229 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். தோனி 196 சிக்ஸர்களுடன் 2வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் டி வில்லியர்சுக்கு 3வது இடம். இந்த 9 ஆயிரம் ரன்களில் 24 சதங்கள் அடங்கியிருக்கிறது. அதில், டிவில்லியர்சுக்கு 2-வது இடம். முதலிடத்தில் உள்ள சச்சின் 25 சதங்கள் அடித்துள்ளார்

ஒரு நாள் போட்டிகளில் மிக விரைவாக 8 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையும் டி வில்லியர்டசிடம்தான் உள்ளது.  182 இன்னிங்ஸ்களில் 8 ஆயிரம் ரன்களை  டி வில்லியர்ஸ் அடித்துள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி இதுவரை 7,755 ரன்கள் அடித்துள்ளார். இதற்கு விராட் கோலிக்கு 171 இன்னிங்ஸ்களே தேவைப்பட்டது. இன்னும் 10 இன்னிங்ஸகளில் விராட்கோலி 245 ரன்கள் அடித்தால், 8 ஆயிரம் ரன்களை கடந்து டி வில்லியர்சின் சாதனையை முறியடித்து விடுவார்.

ஒருநாள் போட்டிகளை பொறுத்த வரை டி வில்லியர்ஸிடம் பல சாதனைகள் உள்ளன.  31 பந்துகளில் சதம் அடித்துள்ளார். இதில் 11 சிக்ஸர்கள் 8 பவுண்டரிகள் அடங்கும். இதற்கு முன் நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்ஸன் 36 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. பதினாறு பந்துகளில் அரை சதம் விளாசிய சாதனையும் டி வில்லியர்சிடம் இருக்கிறது. 

-எம்.குமரேசன்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close