Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இனி கோல் பஞ்சாயத்துகள் கால்பந்தில் கிடையாது... வாட்ச் பார்த்தே சொல்வார் நடுவர்..!

கோல்

ரெடிவிஸ் லீக் கால்பந்து போட்டியில் ஃபெயனார்ட் அணியும் பிஎஸ்வி அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் 82வது நிமிடத்தில் நடந்த சம்பவம் அனைத்து கால்பந்து ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கோல்கீப்பர் பந்தை தடுத்தும் அதனை நடுவர் கோல் என அறிவித்தார். இந்த ஒற்றை கோல் புள்ளிப்பட்டியலிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

இரு அணிகளும் தலா ஒரு கோலடித்து சமநிலையில் இருக்க 82வது நிமிடத்தில் ஃபெயனார்ட் அணி வீரர் தலையால் முட்டி பந்தை கோல் கீப்பர் பக்கம் அடித்தார். அவர் அடித்த பந்தை கோல் கீப்பர் கோல் வளையத்துக்குள் ஒரு சில மில்லி மீட்டர் இடைவெளியில் பந்து தரையில் பட்டு பிடிக்க அதனை கோல் என அறிவித்தார் நடுவர். இதனை தொடர்ந்து பிஎஸ்வி வீரர்கள் கள நடுவரிடம் முறையிட கோல் ரிவியூ சிஸ்டம் மூலம் இந்த பந்து கண்காணிக்கப்பட்டது. 

கோல்

அதில் பால் ட்ராக்கிங் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பந்தை நேரடியாக கீப்பர் பிடிக்காமல் வளையத்துக்குள் சில மில்லிமீட்டர் உள்ளே தரையில் விழுந்த பந்தை தான் பிடித்துள்ளார் என்பது தெரியவந்தது. இது பிஎஸ்வி அணிக்கு பெரிய இழப்பாக அமைந்தது. புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் இருந்த அணி இந்த ட்ரா செய்திருந்தாலே 11 புள்ளிகளோடு கோப்பை கனவை தக்க வைத்திருக்கும். ஆனால் இந்த தொழில்நுட்ப கோலால் அதன் சாம்ப்பியன் கனவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

இதனால்  இந்த தொடரில் பங்கேற்கும் மற்றொரு அஜாக்ஸ் அணி பி.எஸ்.வி அணியை முந்த இந்த கோல் காரணமாக அமைந்தது. கிரிக்கெட்டில் தொழில்நுட்பம் அறிமுகமாகி இந்திய அணிக்கு பல சாதகமான முடிவுகளையும் கடைசி போட்டியில் மிக மோசமான முடிவுகளையும் தந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல தான் இந்த போட்டியையும் கோல் ரிவியூ மாற்றியுள்ளது. 

கோல் ரிவியூ சிஸ்டம் எப்படி செய்யப்படுகிறது?

கிரிக்கெட் புட்பால் போன்ற போட்டிகள் பல கேமராக்களை கொண்டு பதிவு செய்யப்படும். அதில் ஒரு கேமராவின் வேலை பால் ட்ராக்கிங்காக மட்டுமே இருக்கும். அதன் வேலை பந்து எங்கெல்லாம் செல்கிறதோ அதனை பின் தொடர்வது மட்டுமே இதன் மூலம் பந்தின் பாதையை கணிக்க முடியும். இதைத் தான் பால் ட்ராக்கிங் என்கிறோம். 

பால் ட்ராக்கிங் மூலம் எந்த கோணத்தில் பந்து பயணித்தது என்பது அறியப்பட்டு அதே வேகத்தில் பந்தின் பாதை அறியப்படும் அதன் மூலம் பந்து கோல் வளையத்துக்குள் எந்த இடத்தில் விழுந்தது என்பதை அறிய முடியும்,. அதுதான் இந்த ஆட்டத்திலும் பின்பற்றப்பட்டு சில மில்லிமீட்டர் உள்ளே பந்து விழுந்தது கண்டறியப்பட்டது. நடுவர் கையில் கட்டியிருக்கும் வாட்ச் மூலம் பந்தை ட்ராக் செய்து முடிவுகளை உடனே அறிவிக்கவும் முடியும்.

இதே முறை டென்னிஸ் போட்டிகளில் பந்து எந்த இடத்தில் விழுந்தது. பந்து புள்ளிகளை பெற்றதா இல்லையா என முடிவெடுக்க சரியானதாக இந்த தொழில்நுட்பம் உள்ளது. கிரிக்கெட்டில் டி.ஆர்.எஸ் மூலம் ஹாட் ஸ்பாட், பால் ட்ராக்கிங், ஹாக்ஐ என சூழலுக்கும் ஆட்டத்தின் தன்மைக்கும் ஏற்ப தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. கள நடுவர்களைவிட துல்லியமான முடிவுகளை அறிவிக்கும்படி மேம்படுத்தப்பட்டால் வருங்காலத்தில் நடுவர்கள் இல்லாத ஆட்டங்களுக்கு இந்த தொழில்நுட்பம் கைகொடுக்கும் என்பதில் ஆச்சர்யமில்லை. 

- ச.ஸ்ரீராம்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close