Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விராட் கோலி, அஷ்வினுக்கு பி.சி.சி.ஐ விருதுகள் அறிவிப்பு #BCCIAwards

kohi and ashwin

பிசிசிஐ இந்த ஆண்டுக்கான விருதுகளை அறிவித்திருக்கிறது.  பாலி உம்ரிக்கர் விருது விராட் கோலிக்கும், திலீப் சர்தேசாய் விருது ஆல்ரவுண்டர்  ரவிச்சந்திர அஷ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலி கடந்த ஆண்டு சிறந்த ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தார். டி20 போட்டிகளில் கடந்த ஆண்டு நூறு ரன்களுக்கு மேல் சராசரி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியிலும் கோலி  மிகச்சிறப்பான ஆட்டத்தை விளையாடினார். வெஸ்ட் இண்டீஸ்,  நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம் என  நான்கு தொடர்களிலும் இரட்டைச் சதம் அடித்து பிரமிக்க வைத்திருக்கிறார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. கேப்டனாகவும் தனது பணியை மிகச்சிறப்பாக செய்து வருகிறார். இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றையும் கோலி தலைமையில் இந்தியா வென்றது. 

கோலியை பேட்டிங் சூப்பர் ஸ்டார் எனச் சொன்னால், பவுலிங் சூப்பர் ஸ்டார் அஷ்வின் தான். இந்தியாவின் டெஸ்ட் போட்டிகளில் தொடர் வெற்றிகளுக்கு அஷ்வின் மிக முக்கியமான காரணம் என்றால் அது மிகையில்லை. ஒரு சீஸனில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்தியர் என்ற சாதனையை அஷ்வின் படைத்திருக்கிறார். கும்ளே, கபிலதேவ் சாதனையை முறியடித்த அஷ்வின் அடுத்தபடியாக ஸ்டெயின் சாதனையை குறிவைத்திருக்கிறார். பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் ரவிச்சந்திர அஷ்வின் அசத்தலாக ஆடுகிறார். இந்திய அணியில் தவிர்க்கவே முடியாத ஆல்ரவுண்டராக உருவெடுத்திருக்கிறார் இவர்.

பாலி உம்ரிக்கர் விருதை மூன்றாவது முறையாக பெறுகிறார் விராட் கோஹ்லி. இந்த விருதை மூன்று முறை பெறும் முதல் கிரிக்கெட் வீரர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக 2011 - 2012 மற்றும் 2014-2015 சீசன்களில் இந்த விருதை வென்றிருந்தார் கோலி. அஷ்வின் 2011க்கு பிறகு மீண்டும் திலீப் சர்தேசாய் விருதை ஜெயித்திருக்கிறார். இவர்களுக்கு வரும் எட்டாம் தேதி பெங்களூருவில் விருது வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

பு.விவேக் ஆனந்த் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close