Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்வதேச கிரிக்கெட்டுக்கு குட் பை சொன்னார், டுவைன் ஸ்மித்!

வெஸ்ட் இன்டீஸை சேர்ந்த டுவைன் ஸ்மித், அதிரடி பேட்ஸ்மேனாகவும் ஆல்ரவுண்டராகவும் ஆடி வருபவர். 33 வயதான டுவைன் ஸ்மித், நேற்றிரவு அதிரடியாக ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முற்றிலுமாக ஓய்வு பெறுவதாகத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, இனி எந்த ஒரு பார்மெட் கிரிக்கெட்டிலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

dwyne smith

2003 - 2004 சீசனில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனவர் ஸ்மித். இதுவரை ஒன்பது டெஸ்ட் போட்டிகளிலும், 105 ஒருநாள் போட்டிகளிலும், 33 டி20 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடியிருக்கிறார். சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டாலும், தொடர்ந்து டி20 லீக் போட்டிகளில் ஆடப் போவதாகத் தெரிவித்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு இவர் மிகவும் பரிச்சயமானவர். ஐ.பி.எல்லில் தற்போது குஜராத் லயன்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close