Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘கோலி எது செஞ்சாலும் கரெக்ட்...’ பாராட்டிய ஹாலிவுட் ஹீரோ!

புனேவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் மேட்ச், ஒரு கதையல்ல; இந்தியாவுக்கு ஒரு கறுப்பு சரித்திரம்! அதிலும் விராட் கோலியின் ‘க்ளீன் போல்டு’ சமாசாரம், இந்திய ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம். சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தோல்வி அடைந்த இந்திய அணியை சோஷியல் மீடியாக்களில் அனைவரும் கழுவி ஊற்றி வரும் நிலையில், புனேவில் 13 ரன்களுடன் வெளியேறிய கோலியையும், 333 ரன்களுடன் 'வொயிட் வாஷ்' செய்யப்பட்ட நமது இந்திய அணியையும் பெருமை பொங்க உச்சி மோந்திருக்கிறார், ஹாலிவுட் ஹீரோ ஹக் ஜேக்மேன். 

'கோலியைப் பாராட்டுற அளவுக்கு இவர் என்ன அம்புட்டுப் பெரிய ஆளா' என்பவர்களுக்காக ஒரு லிட்டில் விக்கிபீடியா!

 

கோலி

 

ஆஸ்கர் வாங்கவில்லை; விஜய் சேதுபதி மாதிரி வருஷத்துக்கு 9 படம் நடித்ததில்லை; ஆனால் ஆர்னால்டுக்கு ஒண்ணுவிட்ட அண்ணன் பிரதர்போல படம் முழுவதும் சிக்ஸ்பேக்கில் அசத்தி, வசூலில் கலக்கி எடுப்பது ஹக் ஜேக்மேனின் பாலிஸி. சுருக்கமாகச் சொன்னால் ‘ஹாலிவுட்டின் சீயான்’ என்று இவரைச் சொல்லலாம். அதைவிட, 'இனி இவர் பிழைக்கவே மாட்டார்' என்று கணிக்கப்பட்ட கேன்சரின் கடைசிக் கட்ட அபாயத்திலிருந்து நம்மூர் யுவராஜ்சிங் மாதிரி மறுபடியும் மீண்டு வந்து ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். 

‘வோல்வெரின்’ பட சீரிஸ் நாயகனான இவர், ‘எக்ஸ்மென்’ ஹாலிவுட் படம் மூலம் உலகப் புகழ் பெற்றவர். புற்றுநோயிலிருந்து மீண்டு முதல் முறையாக மறுபடியும் சிக்ஸ்பேக்குடன் ‘லோகன்’ என்னும் வோல்வெரின் சீரிஸ் படத்தில் நடித்திருக்கிறார் ஹக் ஜேக்மேன். இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆகியிருக்கும் ‘லோகன்’ படத்தின் புரொமோஷனுக்காக மும்பை வந்தவர், தனது ஃபேவரைட் விளையாட்டு கிரிக்கெட் என்றும்; தனது ஃபேவரிட் நாயகன் விராட் கோலி என்றும் சிக்ஸ் அடித்தார். 

 

கோலி

‘‘இந்தியாவில் கிரிக்கெட் பிரசித்தம் என்று எனக்குத் தெரியும். நானும் மிகப் பெரிய கிரிக்கெட் ரசிகன். அதிலும் இந்திய கிரிக்கெட் வீரர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். திறமை மட்டும் காரணம் இல்லை; அவர்களிடம் உள்ள பணிவு, ரசிகர்களிடம் அவர்கள் வைத்திருக்கும் மரியாதை என எல்லாமே என்னை வியக்க வைக்கின்றன. அதிலும் கோலியின் ஸ்டைலும் பண்பும் வீரமும் என்னை மிகவும் கவர்ந்தவை. அவர் ஒரு அமேஸிங் பெர்சனாலிட்டி. மற்றவர்கள் அனைவரும் ஒரு வட்டத்துக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்க, அவர் எப்போதுமே அவுட் ஆஃப் பாக்ஸில் எல்லாவற்றையும் தாண்டிச் சிந்திப்பவர். அவர் என்ன செய்தாலும் அது ரசிக்கும்படி இருக்கிறது. நீங்கள் நினைக்கலாம் - ஆஸ்திரேலியாதான் ஜெயிக்கிறது; திறமையாளர்கள் அதிகம் என்று. ஆனால், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துடன் ஒப்பிடும்போது, பொறுப்புகள் அதிகம் கோலிக்கு. நிஜமாகவே ஒரு கேப்டன் என்பவர் கோலியைப் போன்றுதான் இருக்க வேண்டும். இத்தனை கோடி மக்கள் கொண்ட இந்திய நாட்டின் கனவுகளைச் சுமந்துகொண்டு, இத்தனை ப்ரஷர்களுக்கு மத்தியிலும் கோலி ஆடும் ஆட்டம்... ஆசம்! எங்களுக்குத் தொழில் வேறு வேறாக இருக்கலாம்; ரசிகர்களை மதிக்கும் அவர்தான் எனது இன்ஸ்பிரேஷன்!’’ என்று சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக அடித்துத் தள்ளிவிட்டார் ஹக் ஜேக்மேன்.

இது தவிர, பாலிவுட் நடிகர்களைப் பற்றிய பேச்சு வந்தபோது, ஷாரூக்கானைப் பற்றியும் புகழ்ந்து தள்ளினார் ஹக். ‘‘இந்தியாவில் எனக்குப் பிடித்த நடிகர் ஷாரூக்கான். அவரின் பாடி ஸ்டைலும், ஃபிட்னெஸும் நிச்சயம் இத்தனை வயதிலும் வேறு எந்த நடிகர்களிடமும் இல்லாதது. எனது வோல்வெரின் சீரிஸ்களை இந்தியாவில் படமாக எடுத்தால், அதற்கு மிகச் சரியாகப் பொருந்துபவர், ஷாரூக்கேதான்!’’ என்றும் புகழாரம் சூட்டிவிட்டார். 

இன்னும் உங்ககிட்ட நிறைய எதிர்பார்க்கிறோம் ஹக் ஜேக்மேன்!

- தமிழ்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close