Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல் ஒருநாள் போட்டியில் போராடித் தோற்றது வெஸ்ட் இண்டீஸ்!

இங்கிலாந்து அணி, மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஆன்டிகுவாவில் இன்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில், 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைச் சுவைத்திருக்கிறது இங்கிலாந்து. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், ஆறு விக்கெட்டுகளை இழந்து 296 ரன்களைக் குவித்தது. கேப்டன் இயான் மோர்கன், நிதானமாக ஆடி 116 பந்துகளில் 107 ரன்கள் குவித்தார். பென் ஸ்டோக்ஸ், சாம் பில்லிங்ஸ் இருவரும் அரை சதம் விளாசினர்.

இதையடுத்து, இலக்கைத் துரத்திய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு, ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 39/3  எனத் தத்தளித்த அணிக்கு ஜோனாதன் கார்ட்டரும், ஜேசன் முகம்மதுவும் நம்பிக்கை அளித்தார்கள். இருவரும் அரைசதம் விளாசினார்கள். எனினும் இவ்விருவரும் ஆட்டம் இழந்த பின்னர், மீதமிருந்த விக்கெட்டுகளை வேகமாக இழந்து, வெ.இ. அணி 47.2 ஓவரில் 251 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ், ப்ளங்கட் இருவரும் தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close