Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து கோப்பைக்கு இன்று மல்லுக்கட்டு !

South africa vs new zealand

தென்னாப்பிரிக்க அணி, நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. ஐந்து ஒருநாள் போட்டித்  தொடரில், இதுவரை நான்கு போட்டிகள் நடந்து முடிந்திருக்கின்றன. ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு அணி மாறி மாறி ஜெயித்திருக்கின்றன. இதையடுத்து, 2-2 என தொடர் சமநிலையில் இருக்கிறது. இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் ஜெயிக்கும் அணியே ஒருநாள் தொடரை வெல்லும் என்பதால் இரண்டு அணிகளும் போட்டியை வெல்லும் முனைப்பில் இருக்கின்றன.

2015 உலகக் கோப்பை அரையிறுதியில், நியூசிலாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது தென்னாப்பிரிக்கா. அதற்கு, கணக்கைத் தீர்ப்போம் எனச் சொல்லியிருக்கிறார், கேப்டன் டிவில்லியர்ஸ். பொதுவாக, நாக் அவுட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா சொதப்பித் தள்ளுவது வழக்கம். எனவே, இன்று நடக்கும் போட்டியில் அந்த அணி எப்படிச் செயல்படப்போகிறது எனப் பார்க்க, கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். தென்னாப்பிரிக்கா அணியில் ஹாஷிம் ஆம்லா, இந்தத் தொடரில் ஒழுங்காக ஆடவில்லை. டுமினி, மில்லர் இருவரும் சொதப்பி வருகின்றனர். டிவில்லியர்ஸ் தான் இந்தத் தொடரில் கதாநாயகனாக இருக்கிறார். டி காக் மூன்று அரை சதம் விளாசியிருக்கிறார். டுபிளசிஸ், அணிக்குத் தேவையான ரன்களைச் சேர்த்திருக்கிறார். இந்தத் தொடரில், இதுவரை பல்வேறு சோதனை முயற்சிகளைக் கையாண்டார், டிவில்லியர்ஸ். ஆனால், இந்தப் போட்டி ஜுன் மாதம் நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னோட்டமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார். இதனால், இன்று சரியான கலவையுடன் அணி களமிறங்கும் என எதிர்பார்க்கலாம்.

ஆறு பேட்ஸ்மேன்கள், ஒரு வேகப்பந்து ஆல்ரவுண்டர், இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்ற கலவையுடன் அணி இருக்கும் எனத் தெரிகிறது. நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் என்ற கணக்கோடு களமிறங்கும். மேட் ஹென்றி, சவுத்தீ, போல்ட் ஆகியோரின் வேகப்பந்து தாக்குதலை தென்னாப்பிரிக்கா சமாளித்து வெற்றிபெறுமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close