Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நியாயமாக இருக்க முயன்றேன் - ஐ.சி.சி சேர்மன் பதவியில் இருந்து விலகினார் சஷாங்க் மனோகர்

Shashank Manohar

ஐ.சி.சி தலைவர் பதவியை இந்தியாவைச் சேர்ந்த சஷாங்க் மனோகர் ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் அவர் ஐசிசி தலைவராகப் பதவியேற்றார். தலைவர் பதவிக்கான ஒப்பந்தக் காலம் இரண்டு ஆண்டுகள் இருந்த நிலையில், திடீரென்று மனோகர் ராஜினாமா செய்துள்ளார். ஐசிசி பதவியை ஏற்பதற்கு முன்னர் மனோகர் பிசிசிஐ-ன் தலைவராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுகிறேன்' என்று சஷாங்க் மனோகர் தெரிவித்துள்ளார்.

சஷாங்க் மனோகர் ஐ.சி.சி-யின் தலைமை அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சனுக்கு எழுதிய கடிதத்தில், 'என்னால் முடிந்தவரை அனைத்து விஷயங்களையும் நியாயமாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயன்றேன். இருப்பினும், சில தனிப்பட்ட காரணங்களுக்காக இனிமேலும் என்னால் ஐ.சி.சி-யின் தலைவராகப் பதவி வகிக்க முடியாது. நான் பதவியில் இருந்த வரை எனக்கு அனைத்து விதங்களிலும் பக்க பலமாக இருந்த ஐ.சி.சி நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் நன்றி. எதிர்காலத்தில் ஐ.சி.சி இன்னும் பல உயரங்களை அடைய வாழ்த்துகள்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close