Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சதம் அடித்தார் ஸ்மித்... வலுவான நிலையில் ஆஸ்திரேலியா...!

Steven Smith

இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ஜார்கண்ட் மாநில தலைநகரமான ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா, தொடக்கம் முதலே அடித்து ஆடியது. ஆஸ்திரேலியா தரப்பில், கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் சதம் விளாசி 117 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளார். க்ளன் மேக்ஸ்வெல், அரை சதம் விளாசி 82 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். 

முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா 299 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து, முதல் இன்னிங்ஸை நாளை தொடர உள்ளது. இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

இன்று, ஃபீல்டிங் செய்யும்போது, இந்திய கேப்டன் விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் களத்தில் இருந்து வெளியேறி சிகிச்சை பெற்றார். இதனால், ரஹானே அணியை வழிநடத்தினார்.   

Glen Maxwell

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close